செய்திகள் :

`ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்திவைக்க முடியாது’- குடியரசுத் தலைவர் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 தேதி, ``தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம்.

ஸ்டாலின் - ஆளுநர் ரவி
ஸ்டாலின் - ஆளுநர் ரவி

அந்த 10 மசோதாக்களும் உடனடியாகச் சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” எனக் காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கடந்த செப்டம்பர் மாதம் தொடர்ந்து 10 நாள் விசாரிக்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் உள்ளிட்டோரும், மத்திய அரசு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்நிலையில், இந்த விவகாரத்தின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார்.

அதில், ``குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் மீது அனைத்து தரப்பிலிருந்தும் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200-அதிகாரங்கள் விரிவாக அலசி ஆராயப்பட்டது.

அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், மசோதா மீது முடிவெடுக்க அவருக்கு உள்ள உச்சவரம்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல் பிரச்சினை , மசோதா மீது ஆளுநர் என்னென்ன நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்பது பற்றி தான்...

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பிஆர். கவாய்
Chief Justice Of India BR Gavai

ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவுடன், அதன் மீது முடிவெடுக்க நான்கு விருப்பங்களை அவருக்கு வழங்குகிறது என ஒரு தரப்பினர் கூறியிருக்கிறார்கள். இன்னொரு தரப்பு மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் அவருக்கு இருக்கிறது, அது ஒப்புதல், அளிப்பது நிறுத்தி வைப்பது, அல்லது சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவது

. அல்லது இரண்டாவது முறை ஆளுநர் ஒரு மசோதாவை கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஒரு மசோதாவை நிறுத்தி வைக்கும் பொழுது அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் இருந்தால், அது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும்.

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையின்றி ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. இந்தியாவின் கூட்டாட்சியில், ஆளுநர்கள் ஒரு மசோதா தொடர்பாக அவையுடனான வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அரசியல் சாசன அமர்வு தனித்தனியாக பதில்களை வழங்கி வருகிறது.

(தொடர்ந்து அவை இங்கு அப்டேட் செய்யப்படும்)

மசோதா : குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும், உச்ச நீதிமன்றத்தின் பதில்களும் | முழு விவரம்

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதன் மீது குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.அந்த 14 ... மேலும் பார்க்க

`ஒரு மாநிலத்துக்கு இரு அதிகார அமைப்புகளை ஏற்க முடியாது’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த ... மேலும் பார்க்க

மாநில உரிமை: இன்று முக்கியத் தீர்ப்பு; குடியரசுத் தலைவர் எழுப்பிய '14 கேள்விகள்' என்னென்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த ... மேலும் பார்க்க

`கர்நாடகம், உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில்.!’ - காவிரி வழக்கில் அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட வரைவு அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக... மேலும் பார்க்க

``கோமாவில் இறந்தவர், பாலிசி காலாவதியை ஏற்க முடியாது'' - மனைவிக்கு ரூ.1 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்... மேலும் பார்க்க

2-வது திருமணத்தை பதிவுசெய்ய முதல் மனைவி சம்மதம் வேண்டும்; கேரள ஐகோர்ட் கூறிய தீர்ப்பு

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (44). 2017-ம் ஆண்டு காசர்கோட்டைச் சேர்ந்த ஆபிதா (38) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நில... மேலும் பார்க்க