BB Tamil 9: "ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.!" - விஜய் சேதுபதி
"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்ல; 100% நட்பு, 0% லவ்"- பிரபு சாலமன்
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் 'கும்கி'.
தற்போது அதன் இரண்டாம் பாகமான 'கும்கி 2' நேற்று(நவ.14) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
"கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்லை. 'கும்கி' என்பது ஒரு யானையின் டேக் (Tag) தான்.
சிறு வயதில் இருந்து ஒருவனின் வாழ்வியலை கோர்வையாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அவனுக்கு இந்த சமூகத்தால், மனிதர்களால், அரசியலால் வரும் பிரச்னைகளைத் தாண்டி தன்னுடைய நட்பை எப்படி ஒருவன் காப்பாற்றி கொள்கிறான் என்பது தான் இதன் போக்கு.
இந்தப் படத்தில் 100 சதவிகிதம் நட்பும், 0 சதவிகிதம் லவ் இருக்கும். இந்தப் படத்தில் கதாநாயகன், கதாநாயகி எல்லாம் இல்லை.

இது முழுக்க முழுக்க பயணம் தொடர்பான கதை. நான் சமூக வலைதளங்கள் எதிலும் இல்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பயணம் செய்வேன்.
என்னுடைய பிரதிபலிப்புதான் 'மைனா', 'கும்கி', 'கயல்' படங்கள் எல்லாம்." என்று பேசியிருக்கிறார்.




.jpg)















