கடலூர்: அக்கா மகளை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; தாய்மாமன் சிக்கியது எப்படி?
டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஹரியானாவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல மருத்துவர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்தது. இந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக டாக்டர் உமர் உன் நபி என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.

இவருடன் டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம், உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, நால்வரையும் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள், டிஜிட்டல் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும், உமர் உல் நபியுடன் இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் உறுதியானது. அதன் அடிப்படையில், மூன்று முஸ்லிம் மருத்துவர்கள் உட்பட 4 பேரும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.




















