"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் ம...
தஞ்சையில் ஸ்ரீஐயப்ப ஆராதனை விழா: களப பூஜை; அத்தி மர ஐயப்பன்; விசேஷ படி பூஜை; கலந்து கொள்ளுங்கள்!
2025 நவம்பர் 29-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விசேச வைபோகங்கள் நடைபெற உள்ளன.

கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்கள் ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விஷேச காலங்கள் என்கின்றன சாஸ்திரங்கள். எங்கு பார்த்தாலும் ஸ்ரீஐயப்ப பக்தர்களை தரிசிக்க முடியும் என்பது கார்த்திகை மாதத்தின் சிறப்பு. ஐயப்பனை எண்ணி மாலையிட்டு விரதம் இருப்பவர்களை 'கன்னிசாமி, சாமி, ஐயப்பா, மணிகண்டசாமி, மாளிகைபுரம், குருசாமி,' என்றெல்லாம் தெய்வ வடிவாகவே காண்பது நம் வழக்கம். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை இந்தியாவெங்கிலும் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து மண்டல, மகர ஜோதி பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம். இந்தியாவெங்கும் ஐயப்பனை ஆராதிக்கும் இவ்வேளையில் தஞ்சையிலும் 15 ஆண்டுகளாக ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் ஒரு பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. அதிலும் சபரிமலை சந்நிதான பெரியோர்களைக் கொண்டு சபரிமலை சந்நிதான வழக்கப்படியே நடைபெறுவது இன்னும் விசேஷமானது.
2025 நவம்பர் 29-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விசேச வைபோகங்கள் நடைபெற உள்ளன. 15-வது ஆண்டாக நடைபெற இருக்கும் இந்த விசேஷ வைபவத்தில் நீங்களும் கலந்து கொள்ளலாம். ஐயப்ப பக்தர்களின் நலனுக்காகவும் லோக க்ஷேமத்துக்காக நடத்தி வரும் இவ்விழாக் குழுவினர், இந்த ஆண்டும் விசேஷமாகத் திருமண மற்றும் தொழில் அபிவிருத்தி யோகமளிக்கும் வேண்டுதல் பூஜையாகவே நடத்த உள்ளார்கள். அதிசயமான அத்தி மரத்தாலான ஸ்ரீஐயப்பனின் திருமேனியை நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த விசேஷமான திருப்படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளார்கள்.

29-11-25 அன்று காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஐயப்பன் பவனி, லட்சார்ச்சணை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, பிரமாண்ட தீபாராதனை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என விரிவான பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் உங்கள் குடும்பம் செழிக்க கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொண்டால் வியாபார விருத்தி, நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும்.
குருவாயூர் சபரிமலை முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ எழிக்கோடு கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, சபரிமலை மாளிகைபுரம் முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ வாசுதேவன் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி, காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள், பிரம்மஸ்ரீ ஹரிஹரன் குருஸ்வாமி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை தரிசித்தால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் சபரிமலையில் மட்டுமே செய்யப்படும் பல விசேஷ பூஜைகளை நீங்கள் இங்கே தரிசிக்க முடியும் என்பதும் விசேஷம்.

அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டிக்கொள்ளுங்கள். இந்த ஐயப்ப ஆராதனை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத வாசகர்கள் 29-11-25 அன்று வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும் நேரடி ஒளிபரப்பாக தரிசித்து மகிழலாம்.




















