செய்திகள் :

திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் கொலை; தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

post image

கோவை சாய் பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அபிஷேக் என்ற 6 வயது மகனும், 3 வயதில் வர்ஷினி என்ற மகளும் இருந்தனர். இவரது கணவர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரித்து சென்ற நிலையில், குழந்தைகளுடன் திவ்யா தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜதுரை (35) என்பவருடன் திவ்யாவிற்குத் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. இதற்கு இடையூறாக இருந்ததாக 6 வயது மகன் அபிஷேக்கை, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதியன்று ராஜதுரையும், திவ்யாவும் குச்சியால் அடித்து கொடுமைப்படுத்திய நிலையில் சிறுவன் உயிரிழந்தான்.

திவ்யா
திவ்யா

இந்த வழக்கில் சாய்பாபா காலனி காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து திவ்யாவையும், அவரது ஆண் நண்பர் ராஜதுரையையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் இன்று தீர்ப்பு வழங்கினார். திவ்யா, ராஜதுரை ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில், இருவருக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்கள் அறவிக்கப்பட்டது.

ராஜதுரை
ராஜதுரை

ராஜதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டணையும், 13 ஆண்டுகள் சிறை தண்டணையும், 1.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டன. மேலும் திவ்யாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டணையும், ஆயுள் தண்டணையும் விதித்தார்.

கொடூரமான கொலை வழக்கு என்பதால் தண்டனையை ஏக காலத்தில் இல்லாமல், தனித்தனியாக தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்திரவிட்டார்.

ராஜதுரை 13 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்த பின்பு ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், திவ்யா 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பின்பு ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி விவேகானந்தன் தெரிவித்தார்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பாணியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்; பீகாரில் 24 பேர் சிக்கியது எப்படி?

நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வின் போது வினாத்தாள்கள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த நீட் தேர்வுக்க... மேலும் பார்க்க

சிவகாசி: பிரசவத்தின்போது ஏட்டுவின் மனைவி சிசுவுடன் உயிரிழப்பு; போராட்டம் நடத்திய உறவினர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் ஊழியர் பாக்கியராஜ் ஆனந்தவள்ளி தம்பதியரின் மகள் ரேணுகா தேவி. இவரது கணவர் தினேஷ், தூத்துக்குடி மாவட்டம் செய்து... மேலும் பார்க்க

ஆபாசப் பட மோகம்; 9 மாதக் குழந்தையைக் கடத்திப் பாலியல் கொடுமைசெய்த 12 வயது சிறுவன் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அருகில் குலாரிஹா என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 9 மாத மகளை தங்களது அருகில் படுக்க வைத்துவிட்டு உறங்கினர். அதிகாலை 2 மணிக்கு எழுந்து பார்த்தபோது குழந்தையைக் க... மேலும் பார்க்க

வெளியேறிய மணமகள்; மணமேடை ஏற்றப்பட்ட 13 வயது சகோதரி - மொட்டை கடிதத்தால் நிறுத்தப்பட்ட திருமணம்!

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயதான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக போலீஸ் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. 13 வயது மாணவியின் மூத்த... மேலும் பார்க்க

`ஆண் குழந்தை ரூ.7-8 லட்சம்.. பெண் குழந்தை ரூ.3-4 லட்சம்'- டெல்லியை அதிரவைத்த குழந்தை கடத்தல் கும்பல்

டெல்லியில் மத்திய பகுதியில் உள்ள பாஹர்கஞ்ச் பகுதியில் அடிக்கடி ஒரு பெண் வேறு வேறு குழந்தைகளுடன் நடமாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அத்தகவலின் அடிப்படையில் அது குறித்து விசாரி... மேலும் பார்க்க

``மது அருந்த தண்ணீர் பாட்டில் தராததால் அடித்துக் கொன்றோம்" - வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் பகீர்!

ஜார்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், போல்பெல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சிங். இவர், தூத்துக்குடி சில்லாநத்தம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்... மேலும் பார்க்க