செய்திகள் :

முதியோர் இல்லத்தில் தீ விபத்து: நள்ளிரவில் சூழ்ந்த தீ; 12 முதியவர்கள் பலி! - இயக்குநர் கைது!

post image

மேற்கு இலங்கையில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்குருவதோட்ட (Anguruwatota) நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில், புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு என்பதால் முதியவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் தீ அசுர வேகத்தில் பரவியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து
இலங்கை முதியோர் இல்லத்தில் தீ விபத்து

இந்த கோர விபத்தின் போது இல்லத்தில் இருந்த 51 முதியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இல்லத்தில் முதியவர்களுடன் சேர்த்து, மனநலம் பாதிக்கப்பட்ட சில நபர்களும் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் உதவியோடு பேருந்துகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

தீ விபத்து ஏற்பட்டதில் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த உபயோகப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் கருகிய நிலையில், உடல்கள் அத்தளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அந்த முதியோர் இல்லத்தின் இயக்குநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிகள் உயிரிழப்பு

டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோய... மேலும் பார்க்க

`அதிக நாள் இருக்க மாட்டார்' - மூத்தவருடன் நேரம் செலவிட வந்து, டெல்லி தீ விபத்தில் பலியான 8 பேர்

டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள மால்வியா நகரில் ஹோட்டல் ஒன்றில் நேற்று திடீரென தீப்பிடித்துக்கொண்டதில் 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆவர். இந்த தீவ... மேலும் பார்க்க

பள்ளிக்கரணையில் பயங்கர தீ: காவல்துறையினர் பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தீ விபத்து!

சென்னை பள்ளிக்கரணையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எங்கு? பள்ளிக்கரணையில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது... மேலும் பார்க்க

ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேரத்தில் பலியான மணமகன்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் பரிதாபமாக உய... மேலும் பார்க்க

மியான்மரை அதிர வைத்த வெடிவிபத்து: கட்டடம் தரைமட்டமாகி குழந்தைகள் உட்பட 45 பேர் பரிதாப பலி!

மியான்மர் நாட்டின் எல்லையோரக் கிராமம் ஒன்றில் உள்ள ஒரு பெரிய கட்டடத்தில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுரங்க வேலைகளுக்காக அந்தப் பெரிய கட்டடத்திற்குள்... மேலும் பார்க்க

கேரளம்: பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்து; காயம் அடைந்தவர்கள் குப்பை எடுக்கும் வாகனத்தில் மீட்பு?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்... மேலும் பார்க்க