Bihar: புயலை கிளப்பிய முகநூல் பதிவு; பின்னடைவை சந்தித்த மகன்கள் - லாலுவுக்கு இரட...
``ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்; 1300 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு சான்று'' - தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டத்தின் நான்காவது புத்தக திருவிழா 14.11.2025 முதல் 24.11.2025 வரை நடைபெறுகிறது. இந்த விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அமைச்சர் பேசுகையில்,
“பொதுவாக, புத்தகங்களைப் படிக்கிற நேரத்தில் மனிதனுக்கு இயற்கையாக அறிவுச் சிந்தனை வளரும். தனக்குள் எழும் கேள்விக்கு உரிய பதிலும் அந்தப் புத்தகத்திலேயே ஒருவருக்குக் கிடைக்கும்.

ஆக புத்தகம் படிப்பதன் வாயிலாக அறிவுத்திறன் மட்டுமல்ல, உலகம் எப்படி இருந்தது, நமக்கு முன்னாலே இருந்த உலகம் எப்படி இருந்தது, அரசர் காலத்திலே எப்படி இருந்தார்கள், அதற்கு முன்னாலே நம்முடைய முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? ஆங்கிலேயர் காலத்திலே நம்முடைய நாடு எப்படி இருந்தது? தற்பொழுது எவ்வாறு உள்ளது, எதிர்காலத்தில் நம்முடைய நாடு எவ்வாறு இருக்க வேண்டும் போன்றவற்றையெல்லாம் எடுத்துரைக்கின்ற ஒரு கண்காட்சியாக இந்த புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது” என்றார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,
“இந்தியாவில் நடைபெறக்கூடிய ஏனைய புத்தகக் கண்காட்சிகள் மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சி, ஜெர்மனியிலே நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சி போன்ற கண்காட்சிகளில் நம்முடைய படைப்புகள் இடம் பெற வேண்டுமெனில், இத்தகைய புத்தகக் கண்காட்சியினை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அத்தகைய மக்கள் இயக்கமாக மாற்றும் பெருமை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும்.

ஒரு ஆட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு துறைகள் தங்களின் துறைகளின் வாயிலாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியும். ஆனால், ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தினை வடிவமைக்க வேண்டுமென்றால், அந்த சமுதாயம் முற்றிலும் அறிவார்ந்த சமுதாயமாக அமைந்தால் மட்டுமே இது சாத்தியம்.
அறிவார்ந்த சமுதாயம் அமைவதற்கு தேவையான அடிப்படை புத்தகங்களிலிருந்தே தொடங்க வேண்டும். ஒருவரது கையிலே இருக்கக் கூடிய ஆபரணங்களிலே சிறந்த ஆபரணம் யாதென வினாவினால், அது புத்தகம் ஒன்றே.
சென்னையிலே பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினையொட்டி மிகப்பெரிய நூலகம் அமைத்ததைப் போன்று, மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரால் ஒரு நூலகம், கோவையில் தந்தை பெரியாரின் பெயரில் ஒரு நூலகம் அதேபோல நம்முடைய திருச்சியில் ஒரு பிரமாதமான நூலகம் பெருந்தலைவர் உடைய பெயரால் இப்படி நாடெங்கிலும் நம்முடைய அறிவு திருக்கோயில்களை உருவாக்கக்கூடிய மாபெரும் ஒரு சரித்திர சாதனையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு உருவாக்கி தந்திருக்கிறார்.
இந்த மாவட்டத்திலிருந்து உருவாகியிருக்கக்கூடிய இலக்கியவாதிகள் இன்றைக்கு சாகித்ய அகாடமி விருது பெற்று திகழ்பவர்களாக விளங்கும் மாவட்டம் நம்முடைய விருதுநகர் மாவட்டம்.
கரிசல் இலக்கியம் என்று ஒரு இலக்கிய மரபை தோற்றுவிக்கக்கூடிய மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதிலே நமக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது. எனவே, வழிவழியாக வந்திருக்கிறோம்.

இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பெண்கள் படிக்க முடியுமா என்று கேள்வி நிலவிய ஒரு காலத்தில் இதே விருதுநகர் மாவட்டத்தினுடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் ஆண்டாள் என்கின்ற ஒரு அற்புதமான ஒரு தமிழ் கவிஞர் உருவாகி திருப்பாவை இயற்றினார் என்றால் பெண் கல்விக்கு வித்திட்டிருக்கக்கூடிய மாவட்டமாக இன்றைக்கு அல்ல ஏறத்தாழ 1300 வருடங்களுக்கு முன்பாக நம்முடைய விருதுநகர் மாவட்டம் இருந்தது” என பேசினார்.














.jpg)