Top Cook Dupe Cook: "சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சி...
BB Tamil 9: "ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.!" - விஜய் சேதுபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடந்தது.
இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் - தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
பிறகு கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்த டாஸ்க்கில் தர்பீஸ் தேசம் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து ரேங்கிங் டாஸ்க் நடந்தது.
பிறகு தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் வினோத், சுபிக்ஷா, FJ போட்டியிட்ட நிலையில் FJ வெற்றி பெற்று அடுத்த வாரத்திற்கானத் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

இந்நிலையில் இன்றைய இன்றைய (நவ.14) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது.
அதில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.
அப்படின்னு ஒன்னா க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட இந்த ராஜா- ராணி டாஸ்க் எப்படி விளையாடணும்'னு தெரிஞ்சிருக்கும்.
வீட்டை அரண்மனையாக்கி ராஜாங்கத்தை இவுங்க கையிலக் கொடுத்தா வீடு முழுசும் குப்பையா இருக்கு.
குப்பைத் தொட்டியில என்ன இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க" என விஜய்சேதுபதி பேசியிருக்கிறார்.


















