செய்திகள் :

Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?

post image

Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவே இருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாக இருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, சிகிச்சை எடுக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி
நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

வயதானவர்களுக்கு கால்களில் ஏற்படும் திடீர் வீக்கத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கால்களில் ஏற்படும்  வீக்கம் இரண்டு வகையாகப் பார்க்கப்படும். ஒன்று வலியோடு கூடிய வீக்கம், இன்னொன்று வலியில்லாத வீக்கம். 

திடீரென அடிபடுதல், காயம் ஏற்படுதல், தசை நார் கிழிதல் போன்ற காரணங்களால் ஏற்படும் வீக்கத்தில் வலியும் இருக்கும். இதுபோன்ற வலி மற்றும் வீக்கத்துக்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

அதிலும், வயதானவர்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பு உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். லேசாக கால் பிரண்டால்கூட சவ்வு கிழியலாம். எலும்புகளில் லேசான விரிசல்கூட ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கப்படாத பட்சத்தில், அது பெரிய பிரச்னையாக மாறக்கூடும்.

அடுத்தது வலியில்லாத வீக்கம். இதிலும் இரண்டு வகை உண்டு. ரத்தக் குழாய்களில் உள்ள வால்வுகள் பலவீனமாவதால், அந்த இடத்தில் ரத்தம் தேங்கிவிடும்.

ரத்தமானது பம்ப் செய்யப்பட்டு, கால்களிலிருந்து இதயத்துக்கு வர வேண்டும். அந்த வால்வு பலவீனமாகியிருந்தால்,  அசுத்தமான ரத்தமும் நீரும் கால்களில் கோத்துக்கொள்ளும். இந்தப் பிரச்னை பல நாள்களாகத் தொடர்ந்தால், சருமம் பாதிக்கப்படலாம்.

அந்தப் பகுதி கருமையாக மாறலாம். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். நாள்கள் செல்லச் செல்ல வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.  இதற்கும் சிகிச்சை மிக அவசியம்.

கால்களில் வீக்கம் | Swelling in the legs
கால்களில் வீக்கம் | Swelling in the legs

வலியில்லாத வீக்கத்துக்கு இன்னொரு காரணம், இதயம் அல்லது சிறுநீரகங்களில் ஏற்பட்ட பாதிப்பாகவும் இருக்கலாம். ஏற்கெனவே, இதய பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இதயநலனை பரிசோதித்துப் பார்க்க வேண்டியது மிக அவசியம்.

அதேபோல சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் இப்படி வலியில்லாத வீக்கம் ஏற்படலாம். சிறுநீரக பாதிப்பின் காரணமாக நீரை வெளியேற்ற முடியாமல், கால்களில் வீக்கமாக வெளிப்படலாம். இந்த வீக்கமானது கால்களில்தான் வர வேண்டும் என்றில்லை, வயிற்றைச் சுற்றியோ, கண்களைச் சுற்றியோகூட வரலாம். இதுவும் தாமதமின்றி உடனடியாக சிகிச்சை கொடுக்கப்பட வேண்டியது.

எனவே, கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து அதற்கான சிகிச்சை வேறுபடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களாக கழுத்து வலி அதிகமாக இருக்கிறது. பெயின் கில்லர் போட்டும் பலன் இல்லை. இந்நிலையில், தலையணை வைத்துப் படுப்பதுதான்கழுத்துவலிக்குக் காரணம் என்றும், அதைத் தவி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரெக்னன்சி கிட் வாங்கி டெஸ்ட் செய்து பார்க்கிறேன்; இது எந்த அளவுக்கு துல்லியமானது?

Doctor Vikatan: எனக்குத் திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றன. பீரியட்ஸ் தள்ளிப்போகும்போதெல்லாம் பிரெகன்சிகிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்க்கிறேன். இது எந்த அளவுக்குத் துல்லியமானது, தவறான ரிசல்ட் க... மேலும் பார்க்க

தண்ணீரை முறைப்படி காய்ச்சிக் குடிப்பது எப்படி?

மூச்சிரைக்க விளையாடிவிட்டு, வரும் வழியில் கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. இன்று நாம் குடிக்கும் தண்ணீரில் இருந்து உண்ணும் உணவு வரை அனைத்துமே ரசாயனக் கலப்பாகிவிட்டது. வீட்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஆப்பிளை தோலுடன் கொடுக்கலாமா? அதனால் பாதிப்பு வருமா?

Doctor Vikatan:குழந்தைகளுக்கு ஆப்பிள் கொடுக்கும்போது தோலுடன் கொடுப்பது சரியா, ஏனெனில் இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகு பூச்சுடன் வருகின்றன. அதனால்ஏதேனும் பாதிப்பு வருமா,எந்தெந்தப் பழங்களை குழந்தைகளுக்க... மேலும் பார்க்க

பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?

வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள த... மேலும் பார்க்க