Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA வ...
IPL: டீல் ஓகே ஆனால் கேப்டன் பதவி வேண்டும் - டிமாண்ட் வைக்கிறாரா ஜடேஜா?
2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது.
இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.
இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் மற்றும் விடுவிக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக வீரர்களின் டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இடம் மாறுவார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.
அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் சிலர் டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க இருப்பதாகவும், சாம்சனுக்கு மாற்றாக சென்னையிலிருந்து ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் அணி வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் News 18 Cricket Next வெளியிட்டிருக்கும் தகவலின்படி ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் அந்த அணியின் கேப்டன் பதவியைக் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சாம்சன் தான் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

ராஜஸ்தான் அணி நிர்வாகமும் ரியான் பராக்கை வருங்காலத்திற்கான ஆப்சனாக பார்த்தது. ரியான் பராக் தவிர்த்து யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அந்த அணியில் கேப்டன் கனவோடு இருக்கிறார்.
இவர்கள் இருவரும் இளம் வீரர்கள். இன்னும் பல சீசன்களுக்கு இவர்களை நம்பலாம். ஆனால், ஜடேஜா ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார். அவரை இந்த சமயத்தில் கேப்டன் ஆக்க ராஜஸ்தான் நிறுவனம் கொஞ்சம் யோசித்துதான் முடிவெடுக்கும்.




















