Bihar Election Results Live: பீகாரில் வெற்றி யாருக்கு? முதல்வர் மாற்றம் வருமா? ந...
UK: 10 ஆண்டுகள் காதலித்தவர் பிரிவு; ``செயற்கை கருத்தரிப்பு செலவை ஏற்க வேண்டும்'' - காதலி கோரிக்கை
இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர், 38 வயதான ஆணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். எட்டு வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தங்கி, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் காதலர் தனது வாழ்க்கை முறை மற்றும் வேலையை காரணமாகக் காட்டி உறவை முறித்துக் கொண்டுள்ளார்.
“திருமணம் செய்து குழந்தை பெற வேண்டிய வயதில் தனிமையில் விடப்பட்டேன். காதலனுக்காகவே எனது வேலையை மாற்றிக் கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு தயாரானேன். ஆனால் கடைசியில் அவர் எடுத்த இந்த முடிவால் என் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது,” என அந்தப் பெண் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண், தி டெலிகிராஃப் பத்திரிகையில் வெளியாகும் பிரபலமான ‘மோரல் மனி (Moral Money)’ பகுதியில் இந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

தனது எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்த அவர், கருமுட்டைகளை (eggs) பாதுகாத்து எதிர்காலத்தில் குழந்தை பெற முடிவு செய்துள்ளார். அதாவது, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இந்த சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படும் என்பதால், அந்தச் செலவை தனது முன்னாள் காதலனே ஏற்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
“தாய்மை அடைய வேண்டிய ஆண்டுகளை அவர் திருடிவிட்டார். எனது எதிர்காலத் திட்டங்கள் அவரது முடிவால் சிதைந்துவிட்டன. எனவே, இந்த பாதிப்பை சரி செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கே உள்ளது,” என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
ஆனால் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலர், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கான பணத்தை வழங்க மறுத்துள்ளார். உறவு முடிந்த பிறகு, தமக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


















