`தமிழ்நாடு ஆம்னி பஸ்களுக்கு சிறை' - கோடிக்கணக்கில் அபராதம் விதித்த கேரளா, கர்நாட...
"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு; இதை எப்படி ஜீரணிக்கிறதுன்னு தெரியல"- பிரவீன் ராஜ் உருக்கம்
பிக் பாஸில் இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர்.
தில் பிரவீனை வெளியேற்றியிருப்பது அன்ஃபேர் ( Unfair) என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரவீன் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எவிக்ட் ஆனது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "எவிக்ஷனைப் பார்த்த பிறகு என்னால தாங்க முடியல.
அழுது அழுது கையெல்லாம் நடுக்கமாகவே இருந்தது. ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டேன்.
ஒரு வேலை நம்ம தப்பு பண்ணிட்டோமோ? சரியா விளையாடலையோ அப்படினு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
பிக் பாஸ் வெளிசத்துல இருந்த நான் இருட்டைப் பார்த்திட்டேனோன்னு தோணுது.
நீங்க நிறைய அன்பைக் கொடுத்திருக்கீங்க. நிறைய மெசேஜ் எனக்கு வந்தது.
இது ஃபேரா? அன்ஃபேரா'னு எனக்கு தெரியல. நான் நல்லா தான் கேம் விளையாடினேன்.
உடைஞ்சு போயிருந்த என்னைய நீங்க தான் தூக்கி விட்டுருக்கீங்க.
காலம் முழுவதும் என்னுடைய திறமைகளை, நடிப்பையும் கொடுத்து விசுவாசமா இருப்பேன்.
உங்களை என்டர்டெயின்மென்ட் பண்ணிக்கிட்டே இருப்பேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இதை எப்படி ஜீரணிக்கிறதுன்னு தெரியல.
எனக்கு சப்போர்ட்டாக இருந்த உங்களுக்கு நன்றி. கடவுள் ஒரு விதி எழுதினால் மக்கள் நீங்கள் ஒரு விதி எழுதுறீங்க" என எமோஷனலாக பேசியிருக்கிறார்.


















