வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வா...
சாலையோரம் கீபோர்டு வாசித்து தெருநாய்களின் பசியை போக்கும் முதியவர் - யார் இவர்?
கொல்கத்தாவின் பரபரப்பான தெருக்களில், 73 வயதான சுப்ரதா என்பவர் கீபோர்டு மற்றும் மௌத் ஆர்கன் வாசித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தெருநாய்களுக்கு உணவளிக்க பயன்படுத்தி வருகிறாராம்.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இந்த விஷயத்தை செய்து வருகிறார். ஆராதனா சாட்டர்ஜி என்ற சமூக ஆர்வலர், இவரது சேவையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து, இந்தச் செய்தி இணையத்தில் பெருமளவில் கவனம் பெற்று வருகிறது.
சுப்ரதா தாஸ், ஒவ்வொரு நாளும் சுமார் 500 ரூபாய் செலவில் தெருநாய்களுக்கு உணவு வழங்கி வருகிறார். முன்பு ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவர் வயது மூப்பு காரணமாக அந்தத் தொழிலை கைவிட்டு, தனது சிறுவயதில் பயின்ற இசைத் திறமையை ஆதரவற்ற விலங்குகளின் பசி போக்கப் பயன்படுத்தி வருகிறார்.

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட போதிலும், தனது சேவையைத் தொடர்ந்து செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது தனிப்பட்ட துயரங்களைத் தாண்டி, இசையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு சுப்ரதா தாஸ் இந்தச் சேவையை முன்னெடுத்து வருகிறார்.
கொல்கத்தாவின் லேக் மால் மற்றும் ராஷ்பெஹாரி போன்ற பகுதிகளில் தினமும் காலை 8 மணி முதல் 10:30 மணி வரை அவர் அங்கு கீபோர்டு மற்றும் மௌத் ஆர்கன் வாசித்து வருகிறார். சுப்ரதா தாஸின் தன்னலமற்ற சேவை குறித்த இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.



















