செய்திகள் :

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக தேர்தலில் முழுமையாக வென்ற இடதுசாரி அமைப்புகள்! - தோல்வியடைந்த ABVP!

post image

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி மாணவ அமைப்புகள் முழுமையாக வென்றிருக்கின்றன.

JNU Students Election
JNU Students Election

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (04.11.2025) மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் இடது சாரி மாணவர் அமைப்புகள் (AISA, SFI, DSF) ஓர் அணியாகவும், வலதுசாரி மாணவர் அமைப்பு (ABVP) ஓர் அணியாகவும் தேர்தலில் பங்கேற்றன. இரண்டு நாட்களாக நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கை தற்போது முடிவடைந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலர், துணைச்செயலர் என நான்கு பதவிகளைக் கொண்ட இத்தேர்தலில் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருவாரியான வாக்குகள் பெற்று நான்கு பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த தேர்தலில் இடதுசாரி மாணவர் அமைப்புகளில் ஏற்பட்ட உடைவின் காரணமாக வலதுசாரி மாணவர் துணைத்தலைவர் பதவியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை தலைவர், துணைத்தலைவர், துணைச் செயலர் பதவிகளை முறையே இடதுசாரி மாணவர்களான அதிதி, கோபிகா, டேனிஷ் அலி என்னும் மூன்று பெண்கள் கைப்பற்றியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவியை சுனில் என்னும் இடதுசாரி மாணவர் கைப்பற்றியுள்ளார்.

JNU Students Election
JNU Students Election

நான்கில் மூன்று பெண்கள் மாணவர் சங்க பொறுப்புகளில் வெற்றி பெறுவது இந்தத் தேர்தலில் கூடுதல் சிறப்பாகும். துணைத்தலைவர் பதவிக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட கேரளாவைச் சேர்ந்த கோபிகா என்பவர் மற்றவர்களை விட மூவாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். ஒவ்வொரு துறைகளுக்குமான கவுன்சிலர் பதவிகளுக்கும் இடதுசாரி மாணவர்களே பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளனர்.

JNU Students Election
JNU Students Election

வெற்றியடைந்துள்ள மாணவர்கள் அனைவரும் பெண்கள், இஸ்லாமிய, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்றும் அனைத்து மாணவர்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும் உறுதி பூண்டனர். மேலும், கல்விசார் நிதிக் குறைப்புக்கு எதிராகவும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகையை அதிகப்படுத்தவும் செய்வோம் என்றனர். மேலும் அறிவுப்புலத்திலும், போராட்டத்திலும் பெயர் போன டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தை மீண்டும் இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்றனர்.

"நியூயார்க்கைப் போன்று எந்த கானையும் மும்பை மேயராக அனுமதிக்க மாட்டோம்" - பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த மேயர் மற்றும் ஆளுநர் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளனர்.நியூயார்க் மாநகராட்சி மேயராக 34 வயதேயான ஜோஹ்ரா... மேலும் பார்க்க

` நிதிஷுக்கு 20 ஆண்டுகள் கொடுத்தது போதும்' - மகனை முதல்வராக்க பீகார் மக்களிடம் லாலு கோரிக்கை

243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 11-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.இதில், தே... மேலும் பார்க்க

பாமக: "அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்; பெயரையும் நானே சொல்கிறேன்" - ராமதாஸ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் தேர்தல் வியூகங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் மும்முரமாகியிருக்கின்றன.ஆனால், பாமக இன்னும் உட்கட்சி மோதலில் இருந்தே மீளமுடியாமல் த... மேலும் பார்க்க

'2 மணி நேரத்துக்கு மேல் கூட்டம் காத்திருந்தால்...' - அரசியல் கட்சிகளின் பரப்புரை நெறிமுறைகள்!

அரசியல் கட்சிகளின் பரப்புரை கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சமர்பிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா... மேலும் பார்க்க

"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" - சீமான் கூறுவதென்ன?

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. 'INDIA' கூட்டணி, 'NDA' கூட்டணி என... மேலும் பார்க்க