வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் ப...
BB Tamil 9: "என்னோட லிஸ்ட்லயே நீ இல்ல" - கொளுத்திப் போடும் டாஸ்க்!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் நேற்று (நவ.16) திவாகர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் "உங்களுக்கான போட்டியாளராக யாரை நினைக்கிறீர்கள்"என்று பிக் பாஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு என்னுடைய போட்டியாளர் FJ தான் என்று விஜே பார்வதி கூறியிருக்கிறார்.
தொடர்ந்து "இந்த நபர் என்னுடைய லிஸ்டிலேயே இல்ல என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்" என்ற கேள்விக்கு வியானா, சுபிக்ஷா இருவரும் ரம்யாவை சொல்ல, ரம்யா வியானாவை சொல்கிறார். "சாண்ட்ரா VS கனி என ஒரு ஃபார்மட் கிரியேட் செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய லிஸ்டில் கனி இல்லவே இல்லை" என சாண்ட்ரா கூறுகிறார்.




















