ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக...
BB Tamil 9: "நீங்க வெளிய வந்துருங்க" - சேதுபதியிடம் வாக்குவாதம் செய்த ரம்யா; திறந்த பிக் பாஸ் கதவு!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாள்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விஜய் சேதுபதிக்கும், ரம்யா ஜோவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
வார இறுதி டாஸ்கிற்காக என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி, "டாஸ்கில் விக்ரமை அங்கிருந்து எதுக்கு எழுப்புறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?" என்று ரம்யாவை கேள்வி கேட்கிறார்.
அதற்கு "சீரியஸா எனக்கு தெரியாது சார்" என்று ரம்யா சொல்கிறார்.
தொடர்ந்து "நான் அப்செட்டா இருக்கேன். அதனால இப்படித்தான் பேசுவேன்னு பேசக் கூடாது. உங்களுக்கு பிடிக்கலைன்னா நீங்க போலாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்த மாட்டோம். " என்று விஜய் சேதுபதி சொல்ல, "எனக்கு தெரியாது சார். எல்லோரும் நான் பண்ணாத ஒரு விஷயத்தை சொல்லிட்டே இருக்கீங்க" என்று ரம்யா அழுகிறார்.

"கெட்ட வார்த்தை பேசுறீங்க அப்போ அதை சொல்றதுக்கு என்ன?" என்று விஜய் சேதுபதி சொல்ல, "இனிமேல் நான் இங்க இருக்க மாட்டேன். நான் வீட்டுக்கு போறேன் சார்" என்று ரம்யா கூறுகிறார். "நீங்க தாராளமா வெளிய வரலாம்" என்று சேதுபதி கூற பிக் பாஸ் கதவு திறந்துவிட்டதாக வினோத் சொல்கிறார்.



















