செய்திகள் :

BB Tamil 9 Day 35: சாண்ட்ராவின் சீக்ரெட் டாஸ்க்; Unpredicted & unfair எவிக்ட் ஆன பிரவீன்

post image

பிரவீன் ராஜின் எவிக்ஷன் ரொம்பவும் எமோஷனலாக இருந்தது. Unpredicted & unfair. ‘வெளியுலகத்த மிஸ் பண்றேன்’ என்று ஆட்டத்தை தொடர விரும்பாத சுமாரான போட்டியாளரான அரோரா இன்னமும் உள்ளே இருக்கிறார். 

ஆனால் தன் திறமையை வெளிப்படுத்தி புதிய அடையாளத்தை அடையத் துடித்த பிரவீன் ராஜ் வெளியேறி இருக்கிறார். உண்மையிலேயே வாக்குகள் படிதான் எவிக்ஷன் நடக்கிறதா?

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

ஒருவகையில் பிக் பாஸ் வீட்டை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். துன்பங்கள் வரும் போதெல்லாம் ‘அய்யோ.. இதிலிருந்து தப்பித்து போய் தொலைந்தால் நன்றாக இருக்கும்’ என்று அனத்துவோம். ஆனால் அப்படி போய் தொலைந்த பிறகுதான் இந்த வாழ்க்கையை நிறைய மிஸ் செய்வோம்போல. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 35

வீட்டுக்குள் நுழைந்த விசே “ஹோட்டல் பத்தி ஒரு பாட்டு பாடீனீங்களே.. ரொம்ப நல்லா இருந்தது. இன்னொரு முறை பாடுங்க” என்று கேட்டுக் கொண்டார். விருந்தினர்கள் வெறுப்புடன் வெளியேறி ஹோட்டல் பிசினஸ் மொத்தமாக கவிழ்ந்த பிறகு பாட்டு மட்டும் நன்றாக இருந்து என்ன பயன்?!

“ஹோட்டல் டாஸ்க்ல ஆளுக்கொரு ரோல் கொடுத்தாங்கள்ல.. வேற எந்த ரோல் கொடுத்தா சிறப்பா செஞ்சிருப்பீங்க?.. இது தொடர்பா கருத்து இருக்கா?” என்று முதல் கேள்வியை ஆரம்பித்தார் விசே. 

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

வழக்கம் போல் முதலில் மாட்டியவர் திவாகர். “எனக்கு கொடுத்த சிலை ரோலை சிறப்பா செஞ்சேன்” என்று சம்பந்தமில்லாமல் ஆரம்பித்தார். “மேனேஜர் சொன்னதை நீங்க முதல்ல கேக்கவேயில்ல. நீங்க பாட்டுக்கு ரீல்ஸ் போடறீங்க.. வாரக்கடைசில தலையைக் குனிஞ்சு நின்று நீங்க செஞ்ச தவறுக்கு நீங்களே மௌன அஞ்சலி செலுத்தறீங்க.. அடுத்த வாரமும் அதையேதான் பண்றீங்க.. உக்காருங்க” என்று வாட்டர் மெலனை கலாய்த்தார் விசே. 

எஃப்ஜே சொன்ன புகார், பூமராங் போல திரும்பிய விபரீதம்

முதல் கேள்வியை அம்போ என்று விட்டு விட்டு அடுத்த கேள்விக்கு பாய்ந்தார். “உங்களுக்கு வர வேண்டிய கிரெடிட் வராம போச்சா?” என்று விசே கேட்க அரோரா பதில் சொல்ல பாய்ந்து எழுந்தார். ‘அடடே.. ஆச்சரியமா இருக்கே.. உங்களுக்கு பேச வருமா.. சொல்லுங்க” என்று விசே கிண்டலடித்தவுடன் “எங்க மேனேஜர் அமித் எங்களுக்கு உதவி பண்ணவேயில்ல” என்றவுடன் இந்தப் புகாரில் எஃப்ஜேவும் இணைந்துகொண்டார். “கார்னிவல் ஐடியா நான்தான் கொடுத்தேன். ஆனா அமித் அதை வெளியே சொல்லாம அவருடையது மாதிரி சொல்லிக்கிட்டார்” என்றார் எஃப்ஜே.

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

“இல்லை.. நானும் வேலை செஞ்சேன்.. ஜக்கூஸி ஃபுல்லா தண்ணி நிரப்பினேன். இவங்க ரெண்டு பேரும் காலைல நல்லா தூங்கிட்டு இருந்தாங்க” என்று தன் மீது சொல்லப்பட்ட புகார்களை மறுத்தார் அமித். “எஃப்ஜே செய்யறது ஓவரா இருக்குன்னு தீபக் சொன்னாரு. அதனாலதான் அவரை பண்ண வேணாம்ன்னு சொன்னேன்” என்று அமித் சொல்ல “அப்படியா.. தீபக்கையே கூப்பிட்டு கேட்டுருவமா?” என்று பின்னாடியே இருந்த தீபக்கை அழைத்தார் விசே. தீபக்கின் இளமையை இவர் பாராட்ட, இவரை அவர் பாராட்ட, தீபக்கின் என்ட்ரி தேவையில்லாத கிம்மிக்ஸ்ஸாக இருந்தது. 

“நான் பண்ண வேணாம்ன்னு சொல்லல.. ரொம்ப கச்சா முச்சான்னு பண்ணாதீங்கன்னுதான் சொன்னேன்” என்று விளக்கமளித்து விட்டு விடைபெற்றார் தீபக்.  பிக் பாஸ் மீதும் வீட்டின் மீதும் தீபக் வைத்திருக்கும் மரியாதையை வியந்து பாராட்டினார் விசே. 

அமித் வேலை செய்தார் என்பதற்கு வினோத் சாட்சியம் சொன்னார். எஃப்ஜே சொன்ன புகாரில் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டது. அதற்கு காரணம் வியானா. “கிரெடிட் பத்தி எஃப்ஜே பேசறார்…ஆனா அவரே நான் செஞ்ச வேலையை மறைச்சு.. அந்த கிரெடிட்டை அவர் எடுத்துக்கிட்டார்” என்பது வியானாவின் புகார். 

“நான் பிரியங்காவோட தீவிர ரசிகன்” - எஃப்ஜேவின் கேரக்டர் பிளே

“அதாவது சார்.. நான் செலிபிரிட்டி பிரியங்காவோட fan boy. அப்படி ஒரு கேரக்ட்டரை நானே உருவாக்கிக்கிட்டேன்.. “யாரும் கிட்ட வரக்கூடாதுன்னு அவங்க சொல்லிட்டாங்க’ன்னு பொய் சொன்னேன். நானேதான் எல்லா வேலையும் செஞ்சேன். ஆனா ரூமூக்குள்ள போகலை” என்கிற விளக்கத்தையே மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தார் எஃப்ஜே.

“ஹலோ.. நீங்க ஒரு கேரக்டர் பிளே பண்றது நல்ல விஷயம். ஆனா அது நீங்க பண்ற வேலைல மட்டும்தான் இருக்கணும். மத்தவங்க உரிமையைப் பறிக்கிற மாதிரி கேரக்டர் பிளே பண்ற உரிமையை உங்களுக்கு யார் தந்தது.. நீங்களா எடுத்துப்பீங்களா.. இதனால மத்தவங்க பாதிக்கப்பட மாட்டாங்களா.. கடைசில பார்த்தா.. நீங்கதான் மத்தவங்க கிரெடிட்டை எடுத்திருக்கீங்க” என்று விசே சொன்னவுடன் பலமாகத் தலையாட்டினார் வியானா. ஆக.. எஃப்ஜே ஆரம்பித்த புகார் அவருக்கே திரும்பி வந்து தாக்கியது. 

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

விசே பிரேக் விட்டு சென்றாலும்கூட கேரக்டர் பிளே நியாயத்தை மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டிருந்தார் எஃப்ஜே. 

“கடவுளே.. இந்த முறையாவது இவங்க நேரடியா பதில் சொல்லணும்” என்று சர்காஸமாக வேண்டிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் விசே. “நீங்க எல்லோரும் மாத்தி மாத்தி பழி சொன்னாலும், ஒருத்தருக்கு இது ரிவார்டா மாறியிருக்கு. இந்த சீசனின் முதல் குறும்படம்.. பார்க்கலாமா?” என்று விசே ஆரம்பித்தவுடன் என்னவாக இருக்கும்?  என்று மக்கள் வியப்பாக யோசித்தார்கள். அரோரா திருட்டுத்தனமாக உணவு சாப்பிட்டது முதல் பல விஷயங்கள் வெளியே வந்தன. 

சாண்ட்ராவின் சீக்ரெட் டாஸ்க் - பலமாக பாராட்டிய விசே

ஆனால் விசே பில்டப் தரும் போதே தெரிந்துபோயிற்று, அது சாண்ட்ராவின் சீக்ரெட் டாஸ்க் தொடர்பான குறும்படம் என்று. வீடியோ முடிந்ததும் ‘அவார்டு படம்’ மாதிரி அனைவரும் எழுந்து நின்று சாண்ட்ராவை பாராட்டினார்கள். 

“ஆக்சுவலி. எனக்கு பயமாத்தான் இருந்தது. திவாகரை மட்டும் டார்கெட் பண்ணி வேலையை விட்டு தூக்கிட்டு மிஷனை முடிக்கலாம்ன்னு பிளான் பண்ணேன். ஆனா அவரோ பிடிவாதமா இருந்துட்டார். ‘அவ்ளோதான்.. இது வேலைக்கு ஆகாது.. தோத்துட்டோம்ன்னு நெனச்சேன்’ ஆனா காலைல வேறு மாதிரி இருந்தது. வியானாவும் பாருவும் பண்ண விஷயங்கள்னால எனக்கு மோட்டிவேஷன் கிடைச்சது. கெஸ்ட்டுங்களை தொல்லை பண்ணா பிரச்சினை பெரிசாகும்னு ஐடியா வந்தது. அதை டெவலப் பண்ணேன். வொர்க்அவுட் ஆச்சு. ஆனா இந்த கிராஸ் பயரில் தேவையில்லாத பலி விக்ரம்” என்று தனது மிஷனை விளக்கினார் சாண்ட்ரா. 

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

‘என்னாலதான் ஐடியா கிடைச்சுதா’ என்று தலையில் அடித்துக் கொண்டார் பாரு. மற்றவர்கள் சாண்ட்ராவை (உள்ளூற எரிச்சலுடன்) பாராட்டினார். ஆனால் விக்ரம்தான் பாவம் நொந்தே போனார். “நீங்க நல்லா பண்ணீங்க. பாராட்டுக்கள்.. ஆனா நான் அழும் போதாவது கொஞ்சம் சொல்லியிருக்கலாம்ல. எனக்கு ஸ்டார் போச்சு.. மென்ட்டல் ஹெல்த் பாதிச்சது.. அதெல்லாம் கூட போகட்டும். நான் தேவையில்லாத அழுததை எங்க வீட்ல எப்படி பார்த்திருப்பாங்க. அதுலயும் எங்க டீம் கலாய்ச்சே கொன்னுடுவாங்க” என்று ஜாலியான சோகத்துடன் அனத்தினார் விக்ரம். 

“ஏம்ப்பா.. திவாகரு.. நான் கேட்ட போதே ரிசைன் பண்ணிட்டுப் போயிருந்தா.. இவ்ளோ பெரிசா ஆகியிருக்காதுல்ல..” என்று விக்ரம் கூவியது அல்டிமேட் காமெடி. 

மிக்சர் சாப்பிட்டு காலத்தை ஓட்டுகிறாரா…அரோரா?


ஒரு பிரேக் விட்டு திரும்பிய விசே “ப்பா.. இன்னிக்கு ஃபேமெண்ட் விழுந்துடுச்சு.. போதும்.. இப்படியே முடியற வரைக்கும் வண்டிய ஓட்டலாம்”.. இந்த மாதிரி இருக்கிற போட்டியாளர் யாரு?’ என்கிற கேள்வியை முன்வைத்தார். 

இந்தக் கேள்விக்கு சந்தேகமில்லாமல் மெஜாரிட்டியாக அரோரா பக்கம் கைகாட்டினார்கள். அவரும் மந்தகாச புன்னகையுடன் இதை ஏற்றுக்கொண்டார். “ஏம்மா.. இத்தனை பேரு உங்களை கழுவி ஊத்தறாங்க.. சிரிக்கறீங்க?” என்று கடிந்து கொண்டார் விசே. திவாகர், கம்ருதீ்ன் பெயரையும் சிலர் சொன்னார்கள். 

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

கனி மற்றும் வினோத் பெயரை சொல்லி பழிதீர்க்க முயன்றார் திவாகர். “நீங்க சொன்ன பதில் சம்பந்தம் ஏதாவது இருந்துதா?” என்று பங்கம் செய்தார் விசே. அரோராவை பலர் கைகாட்டினாலும் “புத்திசாலிப் பொண்ணுங்க.. நல்லா யோசிக்கும். ஆனாலும் விளையாட்டில காட்ட மாட்டேங்குது’ என்று பாராட்டவும் செய்தார்கள். 

“பாருங்க.. அரோரா… உங்க மேல மத்தவங்க இத்தனை நம்பிக்கை வெச்சிருக்காங்க.. உங்க பலம் உங்களுக்கே புரியல. ‘இல்ல.. நான் வெளியே போறேன்…. ரெட் கார்டு கொடுத்தா கூட பரவாயில்ல.. ன்னு நெனக்கறவங்க எல்லாம்.. இப்பவே கிளம்புங்க.. அப்படியெல்லாம் இங்க நீங்க சேவை செய்யத் தேவையில்லை” என்று வாசற்கதவு பக்கம் கை நீட்ட, அரோரா, கம்ருதீன் முகங்கள் இருண்டன. 

அரோராவிற்கு ஆட்டத்தை புரிய வைக்க முயன்ற விசே


“நாமினேஷன்ல விஷயத்துல ஒருத்தருக்கே ஏன் பத்து ஓட்டு குத்தறீங்க.. இவங்க குட்புக்ஸ்ல இருக்கணும்ன்னு ஏன் நெனக்கறீங்க.. பிரச்னையை நேருக்கு நேரா ஃபேஸ் பண்ணி பழகுங்க.. அந்த அனுபவமே தனியா இருக்கும். ஒருத்தர் பின்னாடி ஒளிஞ்சிக்காதீங்க..” என்று அட்வைஸ் செய்துவிட்டு பிரேக்கில் கிளம்பினார் விசே. 

“நான் அவுட்சைட் உலகத்தை ரொம்ப மிஸ் பண்றேன்.. நாய்க்குட்டியை மிஸ் பண்றேன். எனக்கு பிரண்ட்ஸ்ங்க யாரும் கிடையாது. ஒரே பிரெண்டை மிஸ் பண்றேன். இங்க எல்லோரும் ரொம்ப ஸ்வீட்டா இருக்காங்க.. (எதே?!). என்னால யார் கூடயும் சண்டை போட முடியாது. அது என் நேச்சர் கிடையாது” என்றெல்லாம் அனத்திய அரோராவை ஆறுதல்படுத்தினார் கம்மு. 

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

பிரேக் முடிந்து திரும்பிய விசே “அரோரா.. உங்களுக்கு புரியல. உங்களை யார் கூடவும் சண்டைபோட சொல்லல. அது இல்ல இந்த கேம். ஒரு விஷயத்தை நாம வெளிப்படையா சொல்லி, அதனால ஒரு நட்புல பிரிவு ஏற்படும்ன்னா அது உண்மையான நட்பு இல்ல. அந்த உறவுல உண்மை இல்ல. இந்த வீடு தர்ற அனுபவத்தை எடுத்துட்டுப் போங்க. அதுதான் காலத்துக்கும் நிலைக்கும். காசு சீக்கிரம் காணாமப் போயிடும். நான் இன்னிக்கு கோடில சம்பாதிக்கறேன். இருந்தாலும் இப்பவும் கடன் இருக்கு. அது தீரவே தீராது” என்ற விசே “பிரச்னைகள் ஒரு பக்கம் இருக்கு.. நானும் ஒரு பக்கம் இருக்கேன்.. ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கோம்” என்று ககபோ வசனத்தை நினைவுப்படுத்துவது போல் பேசியது சுவாரசியம். 

பிக் பாஸ் ஆட்டம் இப்படித்தான் என்பது தெரிந்தும் அராரோ போன்ற போட்டியாளர்கள் எந்த தைரியத்தில் உள்ளே வருகிறார்கள் என்பது தெரியவில்லை. இவர்களால் உண்மையான ஆட்டக்காரர்கள் வெளியே போக வேண்டிய நிலைமை. இப்போதும் அப்படித்தான் ஆயிற்று. 

பிரவீன் ராஜ் - இந்த சீசனின் முதல் எமோஷனலான எவிக்ஷன்


ஒரே வாரத்தில் இரண்டு எவிக்ஷன். முந்தைய எபிசோடில் துஷார். இப்போது பிரவீன். எவிக்ஷன் கார்ட் காட்டப்பட்ட போது பிரவீன் உட்பட எவராலும் அதை நம்ப முடியவில்லை. விக்ரம் வாயைப் பொத்திக்கொண்டார். மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். 

இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத பிரவீன் “எனக்கு அப்பவே தெரிஞ்சிடுச்சு.. இது நடக்கும்ன்னு.. சத்தியமா தெரியும்” என்று அனத்தியவர், மனம் பேதலித்தவர் போல் அங்கும் இங்கும் ஆவேசமாக உலவினார். மைக்கை கழற்றி வீசி விட்டு தரையில் படுத்துக் கொண்டார். “என் வாழ்க்கைல பல நிராகரிப்புகளை, அவமானங்களை பார்த்திருக்கேன். மீண்டு வந்திருக்கேன். பிக் பாஸை என் குருநாதரா பார்க்கறேன். என் காட்ஃபாதர்.. இதுதான் என் கடைசி நம்பிக்கையா இருந்தது.. இப்ப இதுவும் கைய விட்டுப்போயிடுச்சு” என்று பிரவீன் உருக்கமாகப் பேசியது நெகிழ்வை ஏற்படுத்தியது. 

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

ஒன்று கவனித்தீர்களா?.. பிக் பாஸின் பழைய சீசன்களில் எவிக்ஷன் நடக்கும் போதெல்லாம் கூடி கூடி அழுவார்கள். அவற்றில் உண்மையான கண்ணீரும் இருக்கும். போலியான பாவனைகளும் இருக்கும். ஆனால் சீசன்கள் கடக்க,கடக்க. எவிக்ஷனில் அழுவது மெல்ல மெல்ல நின்று போயிற்று. இந்த சீசனின் எவிக்ஷனில் கூட அத்தனை அழுகை இல்லை. அதுவொரு கிளிஷே என்பது மாதிரி மாறி விட்டது. 

ஆனால் - நீண்ட காலத்திற்குப் பிறகு பிரவீனின் எவிக்ஷனில் அனைவருமே உண்மையாக மனம் வருந்தினார்கள். கண்ணீர் விட்டார்கள். ஒரு திறமையான ஆட்டக்காரன் வீணாக வெளியேறுகிறானே என்று பிரிவுத் துயரத்தை பிரதிபலித்தார்கள். 

‘என்னுடைய அடைக்கலமா பிக் பாஸ் வீடு இருந்தது” என்று பிரவீன் சொன்னது பிக் பாஸையே கலங்க வைத்திருக்க வேண்டும். “பிரவீன்.. இனி மேல் உங்கள் வாழ்க்கையில் எந்தத் தடையும் இருக்காது. வெற்றிகள்தான். புதிய அடையாளங்களை நீங்கள் பெறும் வரைக்கும், பிக் பாஸ் சீசன் 9 என்பது உங்களுக்கு பெரிய பின்புலமாக இருக்கும். நான் உங்களின் பின்னால் காட்ஃபாதராக இருப்பேன்” என்றெல்லாம் ஆசி சொல்ல நெகிழ்ந்து போனார் பிரவீன். 

அடுத்த வாரத்தில் பாரு ‘வீட்டு தல’ ஆவாரா?

மேடைக்கு வந்த பிரவீனிடம் “நீங்க ஒரு நல்ல பிளேயர். இருந்தாலும் இந்த ஆட்டத்துல இப்படித்தான் நடக்கும்.. வெளில உங்களுக்கு பல வெற்றிகள் கிடைக்கும்” என்று விசே சொல்ல “ஒரு படத்துல உங்களுக்கு வில்லனாக நடிக்கணும்” என்கிற ஆசையை சாெல்லி விடைபெற்றுக் கொண்டார் பிரவீன். 

வீட்டிற்குள் நுழைந்த விசே “நடந்த எவிக்ஷன்கள் உங்களுக்கு சில விஷயங்களை புரிய வெச்சிருக்கும். ஆட்டத்தை புரிஞ்சு ஆடுங்க” என்று அட்வைஸ் சொல்லி விடைபெற்றார்.

BB TAMIL 9: DAY 35
BB TAMIL 9: DAY 35

“கெமி.. ரம்யா போன்ற சுமாரான ஆட்டக்காரர்கள் எல்லாம் உள்ளே இருக்காங்க.. ஆனா நல்ல ஆட்டக்காரன் பிரவீன்” என்று அமித் சொல்ல கூட இருந்தவர்கள் ஆமோதித்தார்கள். “ஒருத்தர் மேலயே நிறைய ஓட்டு குத்தினீங்க. இப்ப என்ன ஆச்சுன்னு பாருங்க.” என்று சுபிக்ஷாவிடம் பாரு குறை சொல்ல “இப்படி ஆகும்ன்னு நெனக்கல” என்று வருந்தினார் சுபிக்ஷா. 

வருகிற நாமினேஷன் சடங்காவது ஒழுங்காக நடக்குமா? ‘தல’ போட்டியில் பாருவும் இருக்கிற சூழலில் யார் வெற்றி பெறுவார்?.. பொறுத்திருந்து பார்ப்போம்.

BB Tamil 9: "அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?"- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது வரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக... மேலும் பார்க்க

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு; இதை எப்படி ஜீரணிக்கிறதுன்னு தெரியல"- பிரவீன் ராஜ் உருக்கம்

பிக் பாஸில் இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். தில் பிரவீனை வெளியேற்றியிருப்பது அன்ஃபேர் ( Unfair) என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் ராஜ் தனது இன்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: இருவருக்கும் ஏற்பட்ட மோதல் பார்வதியை கீழே தள்ளிவிட்ட சபரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்... மேலும் பார்க்க

BB Tamil 9: "நீங்க தாராளமா வெளிய வந்துரலாம்" - அரோராவிடம் காட்டமான விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 34: எவிக்ட் ஆன துஷார்; Prank பஞ்சாயத்தை நீண்ட நேரத்திற்கு இழுத்த விசே - நடந்தது என்ன?

வழக்கமான ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரத்தோடு விஜய் சேதுபதி இருந்தாலும் இந்த எபிசோடில் அவர் அடித்த நையாண்டியான பன்ச் லைன்கள் அற்புதம். திவாகர், பாரு, கம்ருதீன், திவ்யா என்று பலரையும் நக்கலடித்த விதம் அரும... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான்தான் அந்த ஐடியாவைக் கொடுத்தேன்; ஆனா" - அமித்தைச் சாடிய FJ

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேறிய நிலையில் கடந்த வாரம் புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ... மேலும் பார்க்க