செய்திகள் :

Bigg Boss Tamil 9: தம்பதியில் ஒருவர் அவுட்.! - இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்?

post image

விஜய் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, எஃப் ஜே உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம்.

இவர்களில், நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வார எவிக்‌ஷனுக்கு முன்பே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார்.

Bigg Boss Tamil Season 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால், டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

இந்த நிலையில் வழக்கமான வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. கடந்த சில வாரங்களாகவே போட்டியாளர்களின் செயல்பாடுகள் மீது பிக்பாஸே அதிருப்தியில் இருப்பதால் விஜய் சேதுபதியும் அவர்களை கண்டித்து வந்தார்.

அதேபோல் இன்றும் சில போட்டியாளர்களை வறுத்தெடுத்து விட்டு பிறகு எவிக்‌ஷன் நேரத்துக்கு வந்தார்.

பிரஜின், சாண்ட்ரா

பார்வதி, வினோத், சுபிக்‌ஷா, அமித் பார்கவ், பிரஜின், உள்ளிட்டோர் எலிமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இரண்டு பேர் எவிட் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

நிகழ்ச்சி முடிய இன்னும் நான்கு வாரங்களே இருப்பதாலும் கடந்த வாரம் எவிக்‌ஷன் இல்லாததாலும் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் முடிவுக்கு வந்தார்களாம்.

எவிக்‌ஷன் ஆன இரண்டு பேர் எ.ஃப்.ஜே. மற்றும் பிரஜின் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் துஷார்
துஷார்

இவர்களில் பிரஜின் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றவர். இவருடன் இவரது மனைவி சாண்ட்ராவையும் சேர்த்து அனுப்பினார்கள். அந்த வீட்டுக்குள் சாண்ட்ராவுக்கும் சேர்த்தே இவர் விளையாடுவதாக ஒரு புகார் எழுந்தது. விஜய் சேதுபதிக்கு ஒருகாலத்தில் நண்பனாக இருந்த  பிரஜினுக்கும் விஜய் சேதுபதிக்கும் நிகழ்ச்சியில் வாக்குவாதம் நடந்தது நினைவிருக்கலாம். அந்த வாரம் அவரை வெளியேற்றுவது போல காட்டி பிறகு வீட்டுக்குத் திரும்ப வைத்ததையும் பார்த்தோம்.

அப்போது சாண்ட்ரா அழுது ஆர்ப்பாட்டம் செய்தது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். கணவன் மனைவி இருவருமே இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு நெகட்டிவிடியையே சம்பாதித்தார்கள் எனச் சொல்லலாம்.

இந்த வாரம் நிஜமாகவே பிரஜின் வெளியேறியிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. சாண்ட்ரா என்ன செய்யப் போகிறார் தெரியவில்லை.

 Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

அடுத்து எஃப்.ஜே. இவர் அந்த வீட்டுக்குள் சென்றதும் சக போட்டியாளர் ஆதிரையுடன் நெருக்கமாக பழகினார். ஒருகட்டத்தில் ஆதிரை எவிக்ட் ஆனதும், வியானாவுடன் பழகினார். வியானாவுக்கு சோறு ஊட்டி விடுவது போன்ற வேலைகளை அவர் செய்தது நிகழ்ச்சிக்கு கன்டென்ட் ஆனது. வியானாவுடன் ட்ராக் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த சூழலில் கடந்த வாரம் திரும்பவும் ஆதிரையை நிகழ்ச்சிக்குள் அனுப்பினார்கள்.

இனி எஃப் ஜே என்ன செய்யப் போகிறார் என பலரும் எதிர்பார்த்த நிலையில்தான் அதிரடியாக எஃப்.ஜே.வை வெளியில் அனுப்பி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது முதற்கட்ட தகவல் தான். இறுதி நேர ட்விஸ்ட் இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

BB Tamil 9: "நீங்க வெளிய வந்துருங்க" - சேதுபதியிடம் வாக்குவாதம் செய்த ரம்யா; திறந்த பிக் பாஸ் கதவு!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாள்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 61: பாரு பற்ற வைத்த நெருப்பு; பொங்கிய ஆதிரை; `நான் அப்படி ஆளு இல்ல' - கதறிய விக்ரம்

இந்த சீசன் அறுபது நாட்களைக் கடந்த நிலையில் இறுதி வரைக்கும் செல்லக்கூடியவர்களாக யார் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. விக்ரம், சுபிக்ஷா என்று இரண்டு பெயர்கள்தான் தோன்றுகின்றன. நாள் 61பி... மேலும் பார்க்க

'மேக்னா'ஸ் ஃபார்ம்: கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை! - இயற்கை விவசாயத்தில் 'பொன்மகள் வந்தாள்' மேக்னா

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் நடித்த மேக்னாவை நினைவிருக்கிறதா? அப்பாவி மருமகளாக வந்து அனைவரின் ஆதரவையும் அள்ளினாரே, அவரேதான். பிறகு 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். ... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 60: முடியாத முக்கோணக் காதல்; பாரு அட்ராசிட்டி - கானா வினோத்தின் முரட்டு சம்பவங்கள்!

வீக்லி டாஸ்க் முடியும் ஒவ்வொரு முறையும் ‘ஹப்பாடா’ என்று போட்டியாளர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஆனால் அப்படி மகிழ வேண்டியது பார்வையாளர்கள்தான்.‘இப்போதாவது முடிந்து தொலைத்ததே’ என்று நிம்மதிப் பெருமூச்... மேலும் பார்க்க

BB Tamil 9: "இப்போ எனக்கு எல்லாம் புரியுது" - அரோராவின் காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க