சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்...
Yubi குரூப் உடன் கைக்கோர்க்கும் DRA ஹோம்ஸ்!
குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் மேம்பாட்டுத் துறையில் முதன்மை வகிக்கும் சென்னையைச் சேர்ந்த DRA ஹோம்ஸ், நிதி சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவால் (AI) முன்னெடுக்கப்படும் உலகின் ஒரே இயங்குதளமாகத் திகழும் யுபி (Yubi) குரூப்புடன் ஒரு முக்கியமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது. சென்னையில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் குடியிருப்பு வளாகத் திட்டங்களுக்காக நிலம் வாங்கும் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில், ₹250 கோடி மதிப்பிலான பாதுகாப்பான நிதித் தளத்தை உருவாக்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.

இந்த நிதித் தளமானது பாதுகாக்கப்பட்ட 'மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்' (NCDs) மூலம் கட்டமைக்கப்படும். இந்த நிதி, நிலம் வாங்குவதற்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும். மூலதனச் சந்தைகளை அணுகவும், UHNIs, HNIs, குடும்ப அலுவலகங்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையினத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் அளவை உயர்த்தக்கூடிய ஒரு கட்டமைப்பின் வழியாக நிதி திரட்டவும் DRA நிறுவனத்திற்கு செபி அங்கீகாரம் பெற்ற ஆன்லைன் பத்திரத் தளமான (OBPP) அஸ்பெரோ (Aspero) உதவும்.
யுபி குரூப் தனது ஒருங்கிணைந்த மூலதனச் சந்தை தொழில்நுட்பம் மற்றும் பரந்த முதலீட்டாளர் வலைப்பின்னல் மூலம் இந்த NCD-களின் கட்டமைப்பு, வெளியீடு மற்றும் விநியோகத்தை முன்னெடுக்கும். விதிமுறைகளுக்கு இணக்கநிலை மற்றும் நிகழ்நேர அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு அணுகுவசதி ஆகிய அம்சங்கள் மூலம் விரைவாகவும், நம்பகத்தன்மையுடனும், திட்டமிடப்பட்டுள்ள இந்த நிதியை DRA நிறுவனம் திரட்டுவதற்கு இக்கூட்டாண்மை உதவும்.
சென்னையின் குடியிருப்பு வகையின ரியல் எஸ்டேட் துறையில் இந்தத் கூட்டுவகிப்பு நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது. இது பாரம்பரிய நிதி முறைகளிலிருந்து மாறி, வெளிப்படையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி கட்டமைப்பை நோக்கி ரியல் எஸ்டேட் துறையின் நகர்வைக் காட்டுகிறது.
இந்த வளர்ச்சி குறித்து DRA ஹோம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திரு. ரஞ்சித் ரத்தோடு கூறுகையில்: "சென்னை மாநகரம் எப்போதும் எங்களின் பெருமைக்குரிய சந்தையாக இருந்து வருகிறது. வீடு வாங்குபவர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் நீண்டகால மதிப்பை வழங்குவதற்கு முறையான நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கை அவசியம். யுபி குரூப் உடனான இந்தக் கூட்டணி, பாதுகாப்பான மூலதனத்தின் மூலம் நிலம் வாங்கும் நடவடிக்கையை திட்டமிடும் எமது திறனை மேலும் வலுப்படுத்தும்; நிதிசார் விவேகத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு இது வழிவகுக்கும்." என்று கூறினார்.

யுபி குரூப் நிறுவனரும் தலைமை செயலாக்க அதிகாரியுமான திரு. கௌரவ் குமார் கூறுகையில்: "இந்தியாவின் மிகவும் நிலையான குடியிருப்பு சந்தைகளில் ஒன்றாக சென்னை தொடர்ந்து நீடிக்கிறது. DRA ஹோம்ஸ் உடன் நாங்கள் கூட்டாக இணைந்திருப்பது பாதுகாப்பான ரியல் எஸ்டேட் கடன் திட்டங்களில் முதலீட்டாளர்கள் பங்கேற்று பலன் பெற வாய்ப்பளிக்கிறது. அதே சமயம், சிறந்த செயல்பாட்டுத் திறனும், மூலதனத்தைப் பயன்படுத்துவதில் ஒழுங்கு கட்டுப்பாட்டையும் கொண்ட ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமான DRA - க்கு இது ஆதரவளிக்கும்." என்றார்.
நிதி திரட்டலுக்கான இந்த தளமானது DRA ஹோம்ஸ் நிறுவனத்திற்கு நிலம் வாங்கும் காலகட்டத்தில் தேவையான நிதி வசதியை தயார்நிலையை வழங்குவதோடு, நில உரிமையாளர்களுடன் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் உதவும். முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, சென்னையின் வளர்ந்து வரும் வீட்டுவசதி தேவையுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான முதலீட்டு செய்வதற்கு நல்ல வாய்ப்பை இது வழங்குகிறது.
"சென்னையில் ரியல் எஸ்டேட் நிதித்துறை எத்தகைய மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் தற்போது பெற்று வருகிறது என்பதற்கு இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் முறைசாரா நிதி வசதியைப் பெறும் கடந்தகால வழக்கத்திலிருந்து விடுபட்டு வருவதையும் மற்றும் நிலையான மற்றும் பொறுப்பான வளர்ச்சிக்கு வித்திடும் வெளிப்படையான, சந்தை சார்ந்த நிதி கட்டமைப்புகளை நோக்கி நகர்வதையும் இது உறுதிப்படுத்துகிறது" என்று பேசியிருக்கிறார்.
DRA பற்றி: 40 ஆண்டுகள் என்ற செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் டிஆர்ஏ, சென்னை எங்கும் உலகத் தரத்திலான செயல்திட்டங்களை வழங்கி ரியல் எஸ்டேட் துறையில் நம்பகமான பிராண்டாக உருவெடுத்திருக்கிறது. 12,000 – க்கும் அதிகமான எண்ணிக்கையில் திருப்தியடைந்த வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் டிஆர்ஏ, நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நேரத்திற்குள் டெலிவரி என்ற அதன் பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. டிஆர்ஏ – ன் நிர்வாக இயக்குனர் திரு. ரஞ்சித் ரத்தோட் அவர்களின் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ், அபார்ட்மென்ட்களை கட்டுவது என்பதையும் கடந்து, வாடிக்கையாளர்களுக்கு “பெருமை மிகு இல்லங்களை” வழங்கி வருகிறோம். சாதித்த உணர்வையும் மற்றும் நமது வீடு என்ற உணர்வையும் வழங்கி, சிறப்பான லைஃப்ஸ்டைலுக்கு ஏற்ற வாழ்விட அமைவிடங்களை நேர்த்தியான சிந்தனையோடு வடிவமைத்து நாங்கள் வழங்கி வருகிறோம்.
குடியிருப்பு வளாக செயல்திட்டம் மீதான நிகழ்நிலைத் தகவலுக்கு ‘டைம்லைன் மீட்டர்’ மற்றும் ‘கஸ்டமர் டிலைட் மீட்டர்’ போன்றவை வாடிக்கையாளர் திருப்தி மீது கொண்டிருக்கும் எமது அக்கறையைப் பிரதிபலிக்கின்றன; புராஜெக்ட் விவரங்களுக்கும் மற்றும் ஆவண செயல்பாடுகளுக்கும் எளிதான அணுகுவசதியை இதன் ஆன்லைன் வாடிக்கையாளர் இணையவாசல் உறுதி செய்கிறது. டிஆர்ஏ பிரிஸ்டின் பெவிலியன், டக்ஸிடோ, அஸ்காட், ஸ்லைலான்டிஸ், எலிட், இன்ஃபினிக் மற்றும் போன்ற புராஜெக்ட்களும் நவீனத்துவத்தோடு மதிப்பை உயர்த்துகின்ற முதலீடுகளுடன் ஒருங்கிணைப்பதில் டிஆர்ஏ – ன் பொறுப்புறுதியை எடுத்துக்காட்டுகிறது.
FICCI – ன் ரெய்சா மற்றும் டைம்ஸ் பிசினஸ் அவார்ட்ஸ் போன்ற சிறப்பான விருதுகளின் அங்கீகாரம் பெற்ற டிஆர்ஏ, கிரிஸில் – ன் 7 நட்சத்திர தரநிலையைப் பெற்றிருக்கின்ற சென்னையில் முதல் டெவலப்பர் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புறுதி முன்னெடுப்புகளில் குளம் போன்ற நீர்நிலைகளின் சீரமைப்பும் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி ஆகியவையும் உள்ளடங்கும். சமூகத்தின் நலன் மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை முன்னிலைப்படுத்துவதாக இவைகள் இருக்கின்றன. “காலத்தைக் கடந்து நிற்கும் இல்லம்”, “உரிய நேரத்திற்குள் டெலிவரி” என்ற தனது விருதுவாக்கை செயல்படுத்தி வரும் டிஆர்ஏ, அது உருவாக்கும் ஒவ்வொரு இல்லத்திலும் தொடர்ந்து பெருமையையும், நம்பிக்கையையும் இடம்பெறச் செய்கிறது. இங்கு கனவுகள், நிலைத்து நிற்கும் பாரம்பரியங்களாக மாறுகின்றன.

யுபி (Yubi) பற்றி: கௌரவ் குமார் அவர்களால் 2020-இல் தொடங்கப்பட்ட யுபி குரூப், நிதிச் சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவினால் முன்னெடுக்கப்படும் உலகின் ஒரே AI- இயங்குதளமாகும் (OS). இதன் கீழ் YuVerse, Yubi, Accumn, Spocto X மற்றும் YuCollect ஆகிய சிறப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. Peak XV, Insight Partners, Lightspeed போன்ற முன்னணி நிறுவனங்களின் முதலீட்டைப் பெற்றுள்ள யுபி குரூப், இதுவரை 3.5 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் ₹3.2 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு கடன் தொகையை ஏதுவாக்கியிருக்கிறது. 17,000+ நிறுவனங்கள் மற்றும் 6200+ முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குனர்களுக்கு சேவையாற்றி வரும் இக்குழுமம் நிதி திரட்டுலுக்கான செலவுகளை 57% குறைத்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, விதிகளுக்கு இணக்கநிலை மற்றும் செயல்திறன் ஆகிய அம்சங்களை இந்தியாவின் நிதிசார் சேவைகள் துறையில் இந்நிறுவனம் மேம்படுத்தி, மறுவரையறை செய்து வருகிறது, மேலும் விவரங்களுக்கு காணவும்: www.go-yubi.com
அஸ்பெரோ (Aspero) பற்றி: அஸ்பெரோ என்பது சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஆன்லைன் பத்திரத் தளமாகும் (OBPP). இது, முதலீட்டாளர்கள் பல்வேறு தரவரிசையில் உள்ள பத்திரங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் வாங்கவும் விற்கவும் உதவுகிறது. "பரிவர்த்தனை தீர்வுகளுக்காக பங்குச் சந்தை தளங்களுடன் கொண்டுள்ள ஆழமான ஒருங்கிணைப்பு மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த கடன் பத்திர வெளியீட்டாளர்கள் குறித்த விரிவான நுண்ணறிவுகள் மூலம், இத்தளம் நன்கு ஆய்வு செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் பத்திரங்களை வழங்குகிறது. மதிப்பீட்டு நிலை முதல் முதலீடு முதிர்வடையும் காலம் வரை, ஒரு முதலீட்டுச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்தத் தேவைகளையும் அஸ்பெரோ பூர்த்தி செய்கிறது."என்று பேசியிருக்கிறார்.


















