செய்திகள் :

"அதிரடி அபராதங்கள்; ஆம்னி பேருந்து விவகாரத்தில் சுமூக தீர்வு வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

post image

கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் பயணம் செய்த பயணிகளையும் நடுவழியிலேயே இறக்கவிட்டதால், அவர்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

கேரள போக்குவரத்து துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களில் 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தலா 2 லட்சம் வரை அபராதம் என மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பிற மாநில பேருந்துகளும் கேரள போக்குவரத்துத் துறையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்
ஆம்னி பேருந்துகள்

இதுகுறித்து கேரள மோட்டார் வாகனத் துறை (MVD), "பிற மாநிலத்திலிருந்து கேரளா வரும் பல தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள மாநில சாலை வரிகளைச் செலுத்தாமல் ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகின்றன. இதனால் கேரளாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை" எனத் தெரிவித்திருக்கிறது.

இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எட்டும் வரை தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆம்னி பேருந்துகள்

இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு கிடைக்கும் வரையில் வெளி மாநிலங்களுக்கான 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாகக் கூறியிருந்தது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், 'அரசு தலையிட்டு அண்டை மாநிலங்களில் பேச்சு வார்த்தை நடத்தி இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்படுத் வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனவே, விடியா திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று கூறியிருக்கிறார்.

``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக அருண்ராஜ் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது.தவெக வை அதிமு... மேலும் பார்க்க

`திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுங்க, மறக்கவே மாட்டேன்’ - சரத் பவாருக்கு கிராம இளைஞரின் கோரிக்கை

மகாராஷ்டிரா கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அதுவும் விவசாயம் செய்யும் இளைஞர்கள்தான் இது போன்ற சிக்கல்களை அதிக அளவில் சந்திக்கின்றனர். இதனால் இளைஞர்க... மேலும் பார்க்க

புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (12... மேலும் பார்க்க

‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண... மேலும் பார்க்க

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க ... மேலும் பார்க்க