வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வா...
"அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது"- RR குறித்து மனம் திறந்த சஞ்சு
ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன.
அதன்படி, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது.

சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னைக்கு அணிக்கு டிரேட் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நாம் எல்லாரும் இந்த உலகத்தில் குறுகிய காலம்தான் வாழப் போகிறோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன்.

சில உறவுகளையும் சொந்தமாக்கியிருக்கிறேன். அணியில் உள்ள அனைவரையும் என் குடும்பமாகவே நினைத்தேன்.
அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. RR-க்கு நான் என்றும் கடமைப்பட்டு இருப்பேன்" என்று எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார்.





















