செய்திகள் :

குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!

post image

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை வளம் கொஞ்சும் இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது இலஞ்சி. அதாவது தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

ஒருமுறை கபிலர், காசிபர், துா்வாசர் ஆகிய முனிவர்கள் மூவரும் திருக்குற்றால மலையில் கூடியிருந்தனர். ஞானிகள் கூடினால் அவர்களுக்குள் மெய்ஞ்ஞான விவாதமே நிகழும் அல்லவா... அதேபோன்று அவர்கள் அன்றும் சிருஷ்டி தத்துவத்தின் விளக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா்.

கபிலா், "உலகம் இல் பொருளே" என்றார். இந்த உலகம் என்பது மாயை என்பது அவர் கருத்து. அதைக்கேட்ட காசிபரும் துா்வாசரும் "உலகம் உள் பொருளே" என்று வாதிட்டனா். அதாவது உலகம் என்பது நம் கண்முன்னே இருக்கிறது என்கையில் அது எப்படி இல்லாத ஒரு பொருள் என முடியும். அது உள்ள பொருளே என்று பதில் கூறினர்.

இலஞ்சி முருகன் கோயில்
இலஞ்சி முருகன் கோயில்

இது உலகம் தோன்றிய காலம் முதல் உள்ள விவாதம். இதன் விடையை அந்த ஆதி மூலமே அறிவார். காரணம், உலகின் தோற்றம் பற்றியும் உயிர்களின் தோற்றம் பற்றியும் அவன் அல்லவா முழுமையாக அறிவார். எனவே அவரை நோக்கித் தவம் இருந்து விடை கேட்போம் என்கிறார் துர்வாசர். அதற்கு மற்றவர்களும் சம்மதிக்க துர்வாசர் முருகப்பெருமானைத் துதிக்கத் தொடங்கினார்.

பக்தர் குரல் கேட்டாலே ஓடிவரும் அந்த அழகன் முனிவர்கள் வேண்டினால் வராமல் போவானா என்ன? துர்வாசர் முன்பாகத் தோன்றிய அருளிய முருகன் "தாமே முத்தொழில் புரியும் மூா்த்தி. தாமே உண்மையான பரம்பொருள்" என்பதை உணர்த்தினார். இதைக் கேட்ட பிற முனிவர்களும் புலவர்கள் தங்கள் ஐயம் நீங்கப் பெற்று முருகப்பெருமானைத் துதித்தனர். இப்படி முருகன் காட்சி தந்து அருள் செய்த தலமே இலஞ்சி. அங்குதான் இலஞ்சிக் குமாரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இலஞ்சி

தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் நீர்த் தடாகத்துக்கு `இலஞ்சி' என்று திருப்பெயர் உண்டு. இத்தலத்தில் அருளும் குமாரரை அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில், 'இலஞ்சி விசாகப்பெருமாளே' எனப் போற்றுகிறார் அருணகிரியார்.

இந்த முருகனுக்கு வரதராஜர் என்கிற திருநாமமும் உண்டு. காரணம், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரம் வாரி வழங்கும் சுவாமியாய் அருள்கிறார் முருகன். எனவேதான் சைவ நூல்கள் இவரை 'வரதராஜா்' என்றே போற்றுகின்றன.

அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனி

இங்கே அருள்பாலிக்கும் சிவபெருமான் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். சிவ-பார்வதி திருக்கல்யாணம் கயிலையில் நடைபெற, உலகமே அங்கு திரண்டது. அதனால் புவியின் சமநிலை தவறியது. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகம் சமநிலை பெற அகத்தியர் தென் திசைக்குச் செல்லவேண்டும் எனப் பணித்தார் சிவனார். அதை ஏற்றுப் பொதிகை மலை வந்த அகத்தியர் தான் பயணிக்கும் வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தபடி வந்தார். அப்படி அவர் இலஞ்சி வந்தபோது சித்ரா நதி தீரத்தில் வெண்மணலால் ஆன ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணலுக்கு வடமொழியில் `இருவாலுகம்' என்று பெயா். அதனால், வெண்மணலால் ஆன அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனிக்கு `இருவாலுக ஈசன்' என்ற திருப்பெயர் ஏற்பட் டது. இத்தலத்தின் அம்பிகைக்கு இருவாலுக ஈசர்க்கினியாள் என்று திருப்பெயர். இத்தல ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால் வாழ்வில் குறைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

இலஞ்சி குற்றாலநாதர்
இலஞ்சி குற்றாலநாதர்

சோமாஸ்கந்த மூர்த்தி

சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குற்றாலநாதர் கோயிலில் `விஷு' திருவிழா நடைபெறும். அப்போது, வள்ளி, தெய்வானை தேவியருடன் இலஞ்சிக் குமாரரும் சென்று கலந்துகொள்வார். மேலும் பத்து தினங்கள் அத்தலத்திலேயே தங்கியிருந்து அருள் பாலிப்பாா்.

பின்னா் திருக்குற்றால அருவியில் தீா்த்தவாரி முடித்து, இலஞ்சி திருத்தலத்துக்குத் திரும்புவார். பொதுவாக சிவனும் முருகனும் அம்பிகையும் கூடியிருக்கும் திருக்கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி என்போம்.

இத்தலத்தில் ஈசன் பத்துநாள்கள் சோமாஸ்கந்தராகக் காட்சி கொடுக்கும் அழகு கண்கொளாக் காட்சி. புறப்படும்போது தன் மகனான இலஞ்சிக்குமாரருக்கு ஈசன் புதுப்பட்டாடை பரிசு தந்து வழி அனுப்பி வைப்பாராம்.

இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பானது. இத்திருநாளின் ஆறுநாள்களிலும் முருகப்பெருமான் ஆறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பார்.

முதல் நாள் பிரம்மனாக, இரண்டாம் நாள் அரியாக மூன்றாம் நாள் ஈசனாக, நான்காம் நாள் மஹேஸ்வரராக, ஐந்தாம் நாள் சதாசிவ மூர்த்தியாக அருள்வாராம். ஆறாம்நாள் முருகப்பெருமானாகத்தோன்றி தானே சகலமும் என்பதை உணர்த்துவார். மேலும் இத்தலத்தின் கந்தசஷ்டி விழா குறித்து திரிகூடராசப்பக் கவிராயா் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடியுள்ளாா்.

இங்குவந்து இலஞ்சிக்குமாரரை வழிபட்டால் குறையாத செல்வமும் நிறைவான ஞானமும் உண்டாகும். நோய் நீங்கும். துன்பங்கள் எதுவும் அண்டாது என்று இத்தலத்தில் வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளிப் பட்டியல் இடுகிறார்கள் பக்தர்கள்.

மேலும் திருமணத்தடை உள்ளவர், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள அவர்களின் குறைகள் விலகி வேண்டுதல் கைகூடுமாம். அப்படிக் கைகூடிய பக்தர்கள் பிராா்த்தனை நிறைவேறியதும் மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியைக் காணிக்கை செலுத்தி அப்பம் மற்றும் வடை நிவேதனமாக படைக்கப்படுகின்றனர்.

இலஞ்சி முருகன் கோயில்
இலஞ்சி முருகன் கோயில்

குளுகுளு குற்றாலத்துக்குச் செல்லும் அன்பர்கள் தவறாமல் இலஞ்சிக்குமாரரையும் தரிசனம் செய்து வாருங்கள். அதன்பின் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் நிறைந்தே இருக்கும்.

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!

பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அ... மேலும் பார்க்க

சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!

தட்சிணாமூர்த்தியே குருவடிவம். அவரை வழிபட்டால் சகலவிதமான ஞானமும் கிடைக்கும். மேலும் வாழ்வில் இருக்கும் தடைகள் விலகி நன்மைகள் கூடிவரும். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி விசேஷ வடிவுடன் அருள்பாலிப்பார். அப... மேலும் பார்க்க

தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரைக் கடித்த நாய்; பணியாளர்களின் அலட்சியமா?

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கிவருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்ககளும், விடுமுறை மற்றும் வ... மேலும் பார்க்க

திருவள்ளூர், பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம்: 6 வாரம் வேண்டுதல் செய்ய நரம்பு பிரச்னை தீர அருளும் ஈசன்!

சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். இங்கே ஈசன் சோழீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். நரம்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் ப... மேலும் பார்க்க

திருவள்ளூர் திருவாலங்காட்டு வடாரண்யேசுவரர் கோயில்: திருவடி தரிசனம்; முக்தி தலம்; ரத்னசபை ரகசியங்கள்!

சைவர்களின் மோட்ச ஸ்தலம் என்று போற்றப்படும் தலம் திருவாலங்காடு. பஞ்ச சபைகளில் மூத்ததான ரத்தின சபை இங்குதான் உள்ளது. உத்திரகோசமங்கை, திருவாரூரைப் போல இதுவும் தோன்றிய காலத்தை அறிய முடியாத பழம்பதி. நாலூர்... மேலும் பார்க்க