வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது.
அது இன்று வளிமண்டல மேலடக்கு சுழற்சியுடன் கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் அது வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், அது மேலும் வலுப்பெற்று, 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி வரலாம்.

இதனால் சென்னை வானிலை மையம் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
நாளை மறுநாள் (நவம்பர் 28) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கடலோர பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
வரும் நவம்பர் 29-ம் தேதி, வட தமிழ்நாட்டில் பல இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
புதுக்கோட்டை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யலாம்.
வரும் நவம்பர் 30-ம் தேதி வட தமிழ்நாட்டில் பல இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம்.
திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம்.
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREAhttps://t.co/LOvDNF1Sqfpic.twitter.com/8npWkRvOWR
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 26, 2025

.jpeg)
















