Bihar: புயலை கிளப்பிய முகநூல் பதிவு; பின்னடைவை சந்தித்த மகன்கள் - லாலுவுக்கு இரட...
Saalumarada Thimmakka: `மரங்களின் தாய்' பத்மஶ்ரீ திம்மக்கா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா (114), சில காலமாக உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார்.
யார் இந்த திம்மக்கா?
ஜூன் 30, 1911 அன்று கர்நாடகாவில் பிறந்த திம்மக்கா, முறையான கல்வி பெறாவிட்டாலும், அடிப்படை சுற்றுச்சூழல் செயல்பாட்டின் அடையாளமாக மாறினார். திருமணம் முடிந்தும் குழந்தை இல்லாத நிலையில், மரங்களைக் குழந்தைகளாக நேசிக்கத் தொடங்கினார்.
அதன் விளைவாக ராமநகர மாவட்டத்தில் ஹுலிகல் - கூடூர் இடையே 4.5 கி.மீ நீளமுள்ள பகுதியில், 385 ஆலமரங்களை நட்டு வளர்த்தார். அவரின் இந்தப் பணி உள்ளூர் முதல் சரவதேச அளவில் கவனம் பெற்றது.
அதன் பலனாக தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), பத்மஸ்ரீ விருது (2019) உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கன்னடத்தில் "மரங்களின் வரிசை" என்று பொருள்படும் சாலுமரதா என்று அன்பாக அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தது. குறிப்பாக இந்தியாவின் சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு அவரின் பங்களிப்பது அளப்பரியது.
சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, ``விருக்ஷமதே' சாலுமரத திம்மக்காவின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் வருத்தமடைந்தேன். ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அவற்றைத் தனது சொந்தக் குழந்தைகளைப் போல வளர்த்த திம்மக்கா, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அர்ப்பணித்தார்.
அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், இயற்கையின் மீதான அவரது அன்பு அவரை அழியாதவராக ஆக்கியுள்ளது. பிரிந்து சென்ற அந்த மாபெரும் ஆன்மாவுக்கு எனது அஞ்சலிகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



















.jpg)
