செய்திகள் :

அரையிறுதியில் மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி அளித்து நியூஸி. அபார வெற்றி!

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மகளிருக்கான உலகக்கோப்பைப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, ஷார்ஜா நகரங்களில் நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் முன்னேறின.

இதையும் படிக்க..: முதல் டெஸ்ட்: மூவர் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டு வரும் இந்திய அணி!
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மேற்கிந்திய தீவுகள் அணியினர்.

நேற்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளித்த தென்னாப்பிரிக்க மகளிரணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக ஷார்ஜாவில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் ஷோஃபி டிவைன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையும் படிக்க..: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!
விக்கெட்டை பறிகொடுத்த நியூஸிலாந்து வீராங்கனை.

நியூசிலாந்து - 128/9

நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜியார்ஜியா பிளிம்மர் 33 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து, சுஸி பேட்ஸ் 26 ரன்களும், இஸபெல்லா கேஸ் 20 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டீன்ரா டோட்டின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஃபி ஃப்ளெட்சர் 2 விக்கெட்டுகளையும், கரிஸ்மா மற்றும் ஆலியா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க..: பாபர் அசாமுக்கு மாற்று வீரராக களமிறங்கியவர் அசத்தல்; பாகிஸ்தான் கேப்டன் பாராட்டு!

மேற்கிந்திய தீவுகள்

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நியூஸிலாந்து வீராங்கனை எடன் கார்சன் தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்தார்.

கேப்டன் மேத்யூஸ் 15 ரன்களிலும், கியாரா 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற விக்கெட் கீப்பர் கேம்பல் 3 ரன்களிலும், டெய்லர் 13 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

ஒருகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

டீன்ரா டோட்டின் மிரட்டல்

பந்து வீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்த டீன்ரா டோட்டின் பேட்டிங்கிலும் வந்து நியூஸிலாந்து அணிக்கு 3 சிக்ஸர் விளாசி மேலும் அதிர்ச்சியளித்தார். அவரது அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி இலக்கை நோக்கி வேகமாக பயணித்தது.

டீன்ரா டோட்டின் 3 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 33 சிக்ஸர்கள் விளாசிய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

நியூஸிலாந்து அணித் தரப்பில் எடன் கார்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை(அக்.20) துபையில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் கோப்பைக்கான ஆட்டத்தில் விளையாடவுள்ளன.

மே.இ.தீவுகளுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து; இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் குவித்துள்ளது.மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஷார்ஜாவில் இன்று (அக்டோபர் 18) நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆட்டநேர முடிவில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதில் மகிழ்ச்சி: ரச்சின் ரவீந்திரா

விராட் கோலியின் விக்கெட்டினை கைப்பற்றியது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய சாதகமான விஷயம் என அந்த அணி வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 18) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: மூவர் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டு வரும் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற... மேலும் பார்க்க

பாபர் அசாமுக்கு மாற்று வீரராக களமிறங்கியவர் அசத்தல்; பாகிஸ்தான் கேப்டன் பாராட்டு!

இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கம்ரான் குலாமை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகி... மேலும் பார்க்க