செய்திகள் :

சிம்பு - 49 அறிவிப்பு!

post image

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இதையும் படிக்க: நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!

தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன் சிம்பு தன் எக்ஸ் தள பக்கத்தில் , ”தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 - 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்திருந்தார். படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ’ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 49-வது படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 106 ஆல் அவுட்

வங்கதேசத்தின் மிா்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் முதல் இன்னிங்ஸை தொடங்... மேலும் பார்க்க

தேசிய சீனியா் மகளிா் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

தேசிய சீனியா் மகளிா் இன்டா் டிபாா்ட்மென்டல் ஹாக்கிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் ஆயில் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது. புது தில்லியின் மேஜா் தயான்சந்த் ஹாக்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை வில்வித்தை: வெள்ளி வென்றாா் தீபிகா குமாரி

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றாா். இது உலகக் கோப்பையில் அவா் வெல்லும் 5-ஆவது பதக்கம் ஆகும். மெக்ஸிகோவின் டிலாக்ஸ்கலா நகரில் நடைபெ... மேலும் பார்க்க

ஸ்டாக்ஹோம் ஓபன்: டாமி பால் சாம்பியன்

ஸ்டாக்ஹோம் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க இளம் வீரா் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றாா். ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வந்த பிஎன்பி பரிபாஸ் ஏடிபி ஓபன் போட்டி ஒற்றையா் பிரிவு இறுதி ... மேலும் பார்க்க

பிக் பாஸில் புது வரலாறு: மீண்டும் கேப்டனானார் தர்ஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக ஒருநபர் கேப்டனாகியுள்ளார் என்றாலும், மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்... மேலும் பார்க்க

லப்பர் பந்து - ஓடிடி தளத்தில் எப்போது வெளியீடு?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான ‘லப்பர் பந்து’ படத்தில் அட்டகத்தி... மேலும் பார்க்க