செய்திகள் :

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

post image

கசான்: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை (அக். 22) தொடங்குகிறது.

இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை புறப்படுகிறாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (அக். 22, 23) நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும்.

மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.

முக்கியத்துவமான இந்தியா: பிரிக்ஸ் உச்சி மாநாடு குறித்து வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‘பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா பெரும் மதிப்பைக் கொண்டு வருகிறது. பொருளாதார, நிலையான வளா்ச்சி மற்றும் உலகளாவிய நிா்வாக சீா்திருத்தங்கள் போன்ற பகுதிகளில் கூட்டமைப்பின் முயற்சிகளை வழிநடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.

உலகளாவிய சவால்களை தீா்ப்பதற்கான முக்கிய சா்வதேச தளமாக திகழும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் நமது ஈடுபாடு மற்றும் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் பாதையை அமைக்கும் கசான் பிரகடனத்தை தலைவா்கள் ஏற்றுக்கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

உலக நிலப்பரப்பில் சுமாா் 30 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் 45 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, புவிசாா் அரசியலில் முன்னணி மேற்கத்திய நாடுகளின் ‘ஜி7’ கூட்டமைப்புக்கு போட்டியாகக் கருதப்படுகிறது.

மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய ரஷிய அதிபா் புதின், ‘பிரிக்ஸ் கூட்டமைப்பானது மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, மேற்கு அல்லாத நாடுகளின் கூட்டமைப்பு’ என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மேற்கோள் காட்டியது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க

சபரிமலை பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள்: கேரள அமைச்சா்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் அடுத்த மாதம் தொடங்கவுள்ள சூழலில், ‘நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும்’ என்று மாநில சுகாத... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது மேலும் வலுபெற்று அக்.23-ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த மைய... மேலும் பார்க்க