செய்திகள் :

நவ.1 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயங்கரவாதத் தாக்குதல்! முன்கூட்டியே மிரட்டல்

post image

ஏர் இந்தியா விமானங்களில் நவ. 1 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

என்ன சொல்ல வருகிறார் குா்பத்வந்த் சிங் பன்னுன்?

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாட்டுக் குடியுரிமை பெற்ற குா்பத்வந்த் சிங் பன்னுன், தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியா்கள்’ அமைப்பின் தலைவராவார். பயங்கரவாத குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்.

இந்த நிலையில், ஏர் இந்திய விமானங்களில் செல்வதைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை, ஏர் இந்தியா விமானங்களில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற மிரட்டல் பதிவை இன்று (அக்.21) அவர் விடுத்துள்ளார்.

சீக்கியப் படுகொலைகள் நிகழ்ந்து 40 ஆண்டுகள் ஆவதையொட்டி ஏர் இந்தியா விமானங்களில் மேற்கண்ட பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டும், நவம்பர் மாத காலகட்டத்தில் அவர் இதே பாணியில் எச்சரிக்கை விடுத்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

கடந்தாண்டு நவம்பரில், பன்னுன் வெளியிட்ட விடியோ பதிவில், புதுதில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்றும், இல்லையெனில் நவ. 19-ஆம் தேதி விமான நிலையம் மூடப்படும் சூழல் உருவாகலாம் என்று சூசகமாக எச்சரித்திருந்தார்.மேலும், அந்நாளில் பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்தில், நாடாளுமன்றக் கட்டடம் மீது டிசம்பர் 13-ஆம் தேதிக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார். குடியரசு தினத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் அவர் கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதலாகவே மேற்கண்ட மிரட்டல் நடவடிக்கைகள் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் வெடிகுண்டு மிரட்டல்கள் பயணிகளிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.

அரசமைப்புச் சட்டத்தின் அங்கம் ‘மதச்சாா்பின்மை’: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ‘இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் அங்கமாக ‘மதச்சாா்பின்மை’ எப்போதும் திகழ்கிறது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமை... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

கசான்: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை (அக். 22) தொடங்குகிறது.இதையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி ரஷியாவுக்கு 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை புறப்படுகி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம்

லாகூா்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது.பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹிந்துகள், சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சொத்துகளை... மேலும் பார்க்க

14% அதிகரித்த வாகன ஏற்றுமதி

புது தில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

தில்லியில் மா்ம பொருள் வெடிப்பு: காலிஸ்தான் தொடா்பை விசாரிக்க டெலிகிராமுக்கு காவல்துறை கடிதம்

தில்லியில் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளிஅருகே மா்ம பொருள் வெடித்ததின் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக வெளியான சமூக ஊடக பதிவின் பின்னணி விவரங்களை கண்டறிய டெலிகிராம் செயலி நிறுவனத்திற்கு காவல்து... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு உறுதியாக உள்ளது: பிரதமா் மோடி பெருமிதம்

மத்திய அரசுக்கு மக்களின் ஆதரவு உறுதியாக உள்ளது. எனவேதான் கடந்த 60 ஆண்டுகளில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து சாதிக்க முடிந்தது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா். தில்லி... மேலும் பார்க்க