செய்திகள் :

Simbu: `இனிமேல் நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!' - சிம்புவின் மாஸ்டர் பிளான் லைப் அப்!

post image
`பத்து தல' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், " இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் என் தலைவன் இப்படி அப்படி என்றெல்லாம் என்னை பற்றி பேசாதீர்கள். என்னுடைய கஷ்ட காலத்தில் நீங்கள் உடன் இருந்ததே போதுமானது. இனிமேல் நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க! வேற மாதிரி இந்த முறை வந்திருக்கிறேன்." எனப் பேசி ரசிகர்களை குஷிப்படுத்தி எதிர்பார்ப்பையும் கிளப்பினார் சிம்பு.

ஆனால் அதன் பிறகு பல திட்டமிடல்களுடன் பொறுமையாக சத்தமில்லாமல்தான் அடுத்தடுத்தப் படங்களுக்கான வேலைகளைப் பார்த்தார் சிம்பு.

`ஓ மை கடவுளே' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து `டிராகன்' திரைப்படத்தை எடுத்து வருகிறார். இத்திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. `டிராகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் அஷ்வத் மாரிமுத்து சிம்புவை வைத்து இயக்கும் திரைப்படம் குறித்தான அறிவிப்பும் தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இது பற்றி சிம்பு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், " ஏ.ஜி. எஸ் நிறுவனத்துடனும், என்னுடைய ரசிகர், திறமையான இளம் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி" என மகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.

STR and Ashwath Marimuthu Film

இதுமட்டுமல்ல, `டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல வர்றேன்!' என இத்திரைப்படம் குறித்து நம்பிக்கையாகவும் கடந்த இரு நாட்களாக பதிவிட்டு வந்தார் சிம்பு. இதுமட்டுமல்ல, மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் `தக் லைஃப்' படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளும் ஒருபுறம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மணி ரத்னம் இயக்கத்தில் இதற்கு முன்பு `செக்க சிவந்த வானம்' திரைப்படத்திலும் நடித்திருந்தார் சிம்பு.

இதை தாண்டி சிம்புவின் கரியரில் மிக முக்கியமாக கருதப்படும் அவரின் 48-வது திரைப்படமும் லைன் அப்பில் இருக்கிறது. `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கடந்தாண்டே வெளியானது. மிக பிரமாண்டமான முறையில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

STR 48

இவையெல்லாம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட திரைப்படங்களின் தகவல். இதை தாண்டி மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `2018' படத்தின் இயக்குநர் ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Silambarasan TR: `Oh My STR'- சிம்புவின் 49 வது படம் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிம்பு அடுத்த படத்திற்கான அப்டேட் வெளியாகி இருக்கிறது.மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து உருவாகி வரும் 'Thug Life' படத்தி... மேலும் பார்க்க

Kanguva: ``உங்கள் குடும்பத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காதீர்கள்!'' - வைரலாகும் சூர்யா டாக்

'கங்குவா' புரொமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா நடிப்பில் `சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா'. மிகப் பிரமாண்டமான... மேலும் பார்க்க

Sobhita: நாக சைதன்யா - துலிபாலா திருமண கொண்டாட்டம் ஆரம்பம்... வைராலகும் புகைபடங்கள் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

Kalan: "நான் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அதை கண்டுக்காமல்..." - தீபா சங்கர் நகைச்சுவை பேச்சு

ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கலன் திரைப்படத்தை, `கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அப்ப... மேலும் பார்க்க