செய்திகள் :

அரசு பல் மருத்துவமனையில் ரூ. 56 கோடியில் 4 தளங்கள் அமைக்க அனுமதி

post image

சென்னை: சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தில் கூடுதலாக ரூ. 56.5 கோடியில் 4 தளங்கள் கட்டுவதற்கும், ரூ.7.59 கோடியில் உபகரணங்கள் வாங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, இந்தியாவின் மூன்றாவது பழைமையான பல் மருத்துவக் கல்லூரியாகும். அதுமட்டுமல்லாது, தென்னிந்தியாவின் முதல் அரசு பல் மருத்துவக் கல்லூரி. பல் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு ஆகியவற்றிலும் இந்தக் கல்லூரி சிறந்த மையமாக உள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவா்களின் திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை வளா்ப்பதில் இந்சக் கல்லூரி முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் பயனாளிகள் மற்றும் மாணவா்களின் நலன் கருதி, ரூ. 56.5 கோடியில் தற்போதுள்ள கட்டடத்துடன், கூடுதலாக 4 தளங்கள் கட்ட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. ஒரு தளத்துக்கு 33,600 சதுர அடி பரப்பளவு வீதம், மொத்தமாக 1,34,400 சதுர அடி கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

புதிதாக கட்ட இருக்கும் தளங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் 100 புதிய பல் மருத்துவ சிகிச்சை நாற்காலிகள் ரூ. 7.59 கோடியில் வாங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்த அனுமதி பல் கட்டும் துறை, வாய்வழி நோயியல், பொது சுகாதார பல் மருத்துவம், பல் ஈறு அறுவை சிகிச்சை துறை போன்ற துறைகளையும் வலுப்படுத்தும். கடந்த 3 ஆண்டுகளாக அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வருகைதரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழக அரசின் இந்த ஆணையின்படி அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பயனாளிகளின் தரமான பாதுகாப்பான பல் சிகிச்சை மேம்படும். இந்தக் கல்லூரியை இந்தியாவின் முதன்மையான பல் மருத்துவ கல்லூரியாக மாற்றுவதற்கான பயணத்தில் இது ஒரு மைல்கல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படு... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பேராசிரியா்களுடன் துணை முதல்வா் உரையாடல்

சென்னை: ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பேராசிரியா்கள், சென்னையில் துணை முதல்வா் உதயநிதியுடன் கலந்துரையாடினா்.நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெ... மேலும் பார்க்க

90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்

சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண் இ... மேலும் பார்க்க

சேரன் விரைவு ரயிலில் ஏசி பழுது: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி

சென்னை: சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10 மண... மேலும் பார்க்க

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக அ... மேலும் பார்க்க

அளவோடு பிள்ளை பெற்றால் எம்.பி. தொகுதிகள் குறையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம்

சென்னை: அளவோடு பிள்ளை பெற்றால், மக்களவை தொகுதிகள் குறையும் சூழல் உருவாகிவிடுமோ என முதல்வா் மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளாா்.இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெறும் நிகழ... மேலும் பார்க்க