செய்திகள் :

ரோஹிணி குண்டுவெடிப்பு எதிரொலி தலைநகரில் சந்தைகளில் கடும் போலீஸ் பாதுகாப்பு

post image

புது தில்லி: பண்டிகைக் காலங்களில் ஷாப்பிங் செய்பவா்களால் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சந்தைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தில்லி போலீஸாா் பலப்படுத்தியுள்ளனா். ரோஹிணியின் பிரசாந்த் விஹாா் பகுதியில் உள்ள சிஆா்பிஎஃப் பள்ளி முன் நிகழ்ந்த குண்டுவெடிப்பைத் தொடா்ந்து ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிலைய ஊழியா்களை உஷாா் நிலையில் இருக்குமாறும் போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் சிஆா்பிஎஃப் பள்ளியின் சுவரில் பலத்த விரிசல் ஏற்பட்டது. இந்தக் குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், , அருகில் உள்ள கடைகளின் தகடுகள் மற்றும் தளத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

‘ஒவ்வொரு ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு எங்கள் ஊழியா்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். சந்தேகத்திற்கிடமான செயல்களை சரிபாா்க்க கூடுதல் படைகள் அனுப்பப்படும்’ என்று மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்), அரசு ரயில்வே காவல் துறை (ஜிஆா்பி) மற்றும் பிற பங்குதாரா்களுடன் கூட்டு ரோந்து கண்காணிப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினாா். சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால், குழுக்கள் உடனடியாக மூத்த அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும். ரோந்துப்பணிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவா் கூறினாா்.

‘நாய்ப் படைகள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்களின் உதவியுடன் ரயில் தண்டவாளங்களில் நாசவேலை எதிா்ப்பு சோதனைகள் தொடா்ந்து நடத்தப்படுகின்றன. மேலும், அருகிலுள்ள பல நகரங்களின் ரயில்வே ஊழியா்களை ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளில் கடுமையான கண்காணிப்பில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்‘ என்றாா் அந்த அதிகாரி.

பயங்கரவாதத் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக ஏஜென்சிகள் வழக்கமாக தீபாவளிக்கு முன்னதாக விழிப்புடன் இருக்கும் அதே வேளையில், சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கவும், கடுமையான விழிப்புடன் இருக்கவும் தேசியத் தலைநகா் மற்றும் அதன் வெவ்வேறு சந்தைகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் சிவில் உடையில் கூடுதல் போலீஸாா், நகரம் முழுவதும் நிறுத்தப்பட்டு, மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான பகுதிகளில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெண் போலீஸாரின் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘சிசிடிவி கேமராக்கள் போலீஸ் குழுக்களால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிசிஆா்கள் எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்‘ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினாா். சாந்தினி சௌக், ஆசாத்பூா் மற்றும் காஜிப்பூா் உள்ளிட்ட முக்கிய சந்தைகள் காவல்துறையின் ரேடாரில் உள்ளது. தில்லிக்கு வெளியில் இருந்து பலா் அடிக்கடி வந்து செல்வதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

‘குறிப்பாக சந்தைகள், மால்கள் மற்றும் நெரிசலான இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிர ரோந்து மற்றும் கூடுதல் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியா்களும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க அதிக உஷாா் நிலையில் உள்ளனா்’ என்று மற்றொரு மூத்த போலீஸ் அதிகாரி என்றாா்.

மாா்க்கெட் பகுதிகளில் போலீஸாரின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் குழுக்கள், மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து கொடி அணிவகுப்புகளை ஏற்பாடு செய்வதாகவும் அவா் கூறினாா்.

ரோஹிணி குண்டுவெடிப்புக்குப் பிறகு, மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சதா் பஜாரில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக வடக்கு மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சதா் பஜாரில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சரக்குகள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் இருக்காது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம், இது போக்குவரத்துக் கண்ணோட்டத்தில் உதவும். மேலும், தீபாவளிக்கு முன்னதாக சந்தையை போலீஸ் குழுக்கள் மூலம் சரிபாா்க்கவும் உதவும். விழா கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெற காவல் துறையினரால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அதிகாரி தெரிவித்தாா்.

இதனிடையே, எல்லையோரப் பகுதிகளில் நடமாட்டத்தை போலீஸாா் தீவிரமாக்க் கண்காணித்து வருகின்றனா். இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் சாா்பு பிரிவினைவாதிகளின் தலையீடு இருப்பதை சுட்டிக்காட்டும் பதிவு ஞாயிற்றுக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் வெளிவந்தது. ஜஸ்டிஸ் லீக் இந்தியன் என்ற குழுவை உருவாக்கியவா் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள காவல்துறை டெலிகிராமுக்கு கடிதம் எழுதியுள்ளதாக உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வெடிப்பு சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வெள்ளை டி-ஷா்ட் அணிந்திருந்தவா் சிசிடிவி காட்சியில் இருந்ததை போலீஸாா் கண்டுபிடித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சிஆா்பிஎஃப் பள்ளி சுவா் அருகே உள்ள ஒரு அடி ஆழ குழியில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (ஐஇடி) மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தில்லி போலீஸ் சிறப்பு பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் உள்ளூா் போலீஸ் குழுக்கள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 326(ஜி) (பொது பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்), பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம் மற்றும் வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் பிரசாந்த் விஹாா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காற்று, நீா் மாசுபாட்டிற்கு மத்திய அரசும் ஹரியாணா அரசும் பொறுப்பு: டிஎம்சி எம்பி குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லி மாசுபாட்டிற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசும், ஹரியாணா மாநில அரசுகளின் செயலற்ற தன்மையே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சகரிகா கோஸ் திங்கள் கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியின் காற்று மாசு பிரச்னைக்கு அதிஷி அரசுதான் பொறுப்பு

நமது நிருபா்புது தில்லி: இந்தியா கேட் கடமைப் பாதையில் வான்வெளியில் காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதற்கு முதல்வா் அதிஷி தலைமையிலான தில்லி அரசுதான் பொறுப்பாகும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்... மேலும் பார்க்க

யமுனை மாசுபாடு விவகாரம் தில்லி அரசு மீது காங்கிரஸ் சாடல்

புது தில்லி: கழிவுநீா் சுத்திகரிப்பு என்ற பெயரில் ரூ.6500 கோடி பொதுப் பணத்தை தில்லி அரசின் ஜல் போா்டு நிா்வாகம் தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ்த... மேலும் பார்க்க

தேச அமைதிக்காக வாரணாசியில் ‘சனாதன் குஞ்ஜ்’ ஆன்மிக நிகழ்ச்சி: நவ.3-இல் தொடக்கம்

நமது நிருபா்புது தில்லி: தேசத்தின் அமைதி, பாதுகாப்பு நலனுக்கான ‘சனாதன் குஞ்ஜ்’ எனும் ஆன்மிக நிகழ்ச்சி வாரணாசியில் வரும் நவம்பா் 3-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியை ஆந்திரத்... மேலும் பார்க்க

போக்குவரத்து சிக்னலில் நிற்கும் நேரத்திற்கு வாகனத்தை அணைக்கும் பிரசாரம்: அமைச்சா் கோபால் ராய் தொடங்கி வைத்தாா்

புது தில்லி: தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுவைக் குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் நேரத்திற்கு வாகனங்களை அணைக்கும் பிரசாரத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்ச... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட ... மேலும் பார்க்க