செய்திகள் :

Nuts: யார், எப்போது, எவ்வளவு, எப்படி உண்ண வேண்டும்? | Health Tips

post image

நட்ஸ் வகைகள் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால், அவற்றை எவ்வளவு உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும், எப்போது உண்ண வேண்டும், யார் உண்ணக்கூடாது என்று பலருக்கும் தெரிவதில்லை. அதுபற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ரேச்சல் தீப்தி. 

பாதாம்

’’நட்ஸ் எனப்படும் கொட்டை வகைகளில், நாம் அதிகம் சாப்பிடுவது பாதாம் , பிஸ்தா, அக்ரூட், முந்திரி ஆகிய நான்கையும்தான். 

இவற்றில் இருக்கிற பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் தாவர சத்துக்கள் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, உணவில் இருக்கிற சத்துக்களை உடலில் சேர்க்கும்.  

இவற்றில் இருக்கிற ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் எனப்படும் நல்ல கொழுப்பு இதயம், சருமம், நகம், முடி ஆகியவற்றுக்கு நல்லது.

இவற்றில் இருக்கிற புரதச்சத்து, உடம்பில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களின் புணரமைப்பிற்கும் உதவும்.‌ 

இவற்றில் இருக்கிற கால்சியம் சத்து, பெண்களுக்கு எலும்பு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் .

யாரெல்லாம் நட்ஸ் சாப்பிடக்கூடாது? 

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், தினமும் இரண்டு முதல் மூன்று நட்ஸுக்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது.கொழுப்பின் அளவு 300-க்கு மேல் இருந்தால், அவர்கள் சிறிது காலம் நட்ஸ் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்,  பிரச்னை முழுவதும் குணமாகும் வரை நட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன் பிறகும், தங்கள் மருத்துவரின்  ஆலோசனைக்குப் பின்பே நட்ஸ் சாப்பிட வேண்டும்.

Nuts

எப்பொழுது நட்ஸ் சாப்பிட வேண்டும்?

காலை எழுந்தவுடன் நல்ல கொழுப்பு மிகுந்த நட்ஸை எடுத்துக்கொண்டால், உடலுக்கு நல்லது. இவற்றில் புரதமும், நார்ச்சத்தும் இருப்பதால் காலையில் எடுத்தால் செரிமானமாக சுலபமாக இருக்கும். காலை நேரத்தில் சாப்பிட முடியாதவர்கள், 11 மணிவாக்கில் சாப்பிடலாம். 

எந்த முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்?

நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால் மிகுந்த பலனளிக்கும். வறுத்தும் சாப்பிடலாம். ஆனால், நெய் அல்லது எண்ணெய் விட்டு வறுப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக மைக்ரோ அவனில் வறுத்து சாப்பிடலாம். கடைகளில் கிடைக்கும் காரம், உப்பு சேர்த்த நட்ஸ்களை தவிர்க்க வேண்டும் . உப்பு சேர்த்த நட்ஸ்கள் அதிகம் உண்ணும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

தீப்தி ரேச்சல்

எவ்வளவு உண்ண வேண்டும்? 

ஒரு கைப்பிடி அளவு அல்லது 30 கிராம் அளவு நட்ஸ் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வழக்கமான உணவுகளையும் எடுத்துக்கொண்டு, கூடவே 100 கிராம் நட்ஸையும் ஒரே நாளில் சாப்பிடும்போது ஒருநாள் உணவிலிருந்து கிடைக்கும் கலோரியின் அளவு 2000-க்கும் அதிகமாகிவிடும். உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை இருந்தால் அந்த கலோரிகளை முழுவதுமாக எரிக்க முடியாது. மீதமுள்ள கலோரிகள் உடலில் தங்கி கொலஸ்ட்ராலாக மாறுகிறது. அந்த கொலஸ்ட்ரால் இதய ரத்தக்குழாய்களில் அடைப்பாகவும் மாறும், கவனம்’’ என்கிறார் தீப்தி ரேச்சல்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Health Tips: தினமும் உப்புத்தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாமா?!

கல் உப்பு சமையலுக்கு மட்டுமல்ல, கிருமிநாசினியாகவும் செயல்படும். அதனால்தான், தொண்டையில் கிருமித்தொற்று ஏற்பட்டால் வெந்நீரில் கல் உப்புப் போட்டு கொப்பளிக்கிறோம். இந்தக் கொப்பளித்தலை முறைப்படி எப்படி செய... மேலும் பார்க்க

Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்த Glutathione மாத்திரையும் ஊசியும் உதவுமா?

Doctor Vikatan: சரும நிறத்தை மேம்படுத்தவும், கருமையைப் போக்கவும்குளுட்டோதயான் என்ற மாத்திரை உதவும் என்று ஒரு செய்தியில் படித்தேன். நான் மாநிறமாக இருப்பேன். எனக்கு இந்த மாத்திரை உதவுமா... எத்தனை நாள்கள... மேலும் பார்க்க

மரண தண்டனைவரை கொண்டு சென்றுள்ள 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' - எச்சரிக்கும் மருத்துவர்

நமக்கெல்லாம் பலவித சிண்ட்ரோம்களைத் தெரியும். அவற்றில் ஒன்றான 'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்' (shaken baby syndrome) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபருக்கு மரண தண்டனை தரும் அளவுக்கு காரணமாக அமைந்திருப்பது, இன்றை... மேலும் பார்க்க

மழைக்காலங்களில் அதிகரிக்கும் பஜ்ஜி, போண்டா லவ்... யாரெல்லாம் கவனமா இருக்கணும்?

தலைப்பை படித்ததுமே ’இந்த நேரத்துல இந்தக் கட்டுரை தேவையா’ என்று சிலர் டென்ஷன் ஆகலாம். ஆனால், பலரோட ஆரோக்கியத்துக்காக இதுபற்றி சொல்லியே ஆகணும். மழைக்காலங்களில் அத்தியாவசியமான பொருட்களை விற்பனை செய்யும் ... மேலும் பார்க்க

China: 'கோடியில் ஒரு தாய்' - இரட்டை கருப்பையுடன் ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்!

வடமேற்கு சீனாவில் வசிக்கும் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று சர்வதேச செய்தியாகியிருக்கிறார். மிக மிக அரிதான இரட்டைக் கருப்பையுடன் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றுள்ளதுதான் செய்... மேலும் பார்க்க