செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வில்லியம்சன் விலகல்!

post image

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனின் தொடையில் தசை கிழிந்த காயம் குணமாகததால் புணேவில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இந்தத் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற வியாழக்கிழமை (அக்டோபர் 24) தொடங்கிறது. கேன் வில்லியம்சன், சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்தார்.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில், “கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டிருந்தாலும், அவர் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. வரவிருக்கும் நாள்களில் காயம் மேலும் குணமடைந்து, மூன்றாவது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நம்புகிறோம்” என்றார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் மாதம் 1 ஆம் தேதி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது.

அதிக எடை, ஒழுக்கமின்மை: மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்!

மும்பை அணியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டதற்காக முழுமையான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அவரது ... மேலும் பார்க்க

ஆண் குழந்தைக்கு தந்தையானார் சர்ஃப்ராஸ் கான்!

இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற மேற்கோளுடன் தனத... மேலும் பார்க்க

ஆஸி. முதல்தரப் போட்டி: ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முதல்தரப் போட்டிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கானருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான 15 பேர் கொண்டஇந்தியா ஏ அ... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வங்கதேச வீரர் சாதனை!

வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி தைஜுல் இஸ்லாம் சாதனை படைத்துள்ளார்.வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று (அக்டோபர் ... மேலும் பார்க்க

13 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் மட்டுமே; பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா?

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்; இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ப... மேலும் பார்க்க