செய்திகள் :

துப்பறிவாளன் - 2 அப்டேட்!

post image

நடிகர் விஷாலின் துப்பறிவாளன் - 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், இறுதியாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில், அரசியலுக்கு வருவது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில், தேவைப்பட்டால் அரசியலுக்கு வருவேன் என்பதுபோல் தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிக்க: அமரன் டிரைலர் தேதி!

தொடர்ந்து, விஷால் லண்டனில் துப்பறிவாளன் - 2 படத்தின் படப்பிடிப்பைத் துவங்கி ஒரே கட்டத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பை இன்னும் துவங்கவில்லை. அறிவிப்பு போஸ்டர் மட்டுமே வெளியானது. அதில், இசை - இளையராஜா என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஷால் துப்பறிவாளன் - 2 படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு லண்டன், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முதலில், இப்படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்க இருந்தார். ஆனால், விஷாலுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மிஷ்கின் இப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

கேரள முதல்வராக டொவினோ தாமஸ்!

நடிகர் டொவினோ தாமஸ் கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உ... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்! -ரசிகர்கள் அதிர்ச்சி

காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.12 ஆண்டுகளுக்குப் பின்னர் 23-வது காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 20... மேலும் பார்க்க

கூலி படப்பிடிப்பில் இணைந்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்குப் பின் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனக... மேலும் பார்க்க

மெய்யழகன் ஓடிடி தேதி!

மெய்யழகன் ஓடிடி வெளியீட்டுத் தேதியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார், சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மெய்யழகன்... மேலும் பார்க்க

அமரன் டிரைலர் தேதி!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப... மேலும் பார்க்க

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22.10.2024மேஷம்:இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன்... மேலும் பார்க்க