செய்திகள் :

கேரள முதல்வராக டொவினோ தாமஸ்!

post image

நடிகர் டொவினோ தாமஸ் கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமானது. அப்படத்தில், மோகன்லாலின் உதவியாளராக சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருப்பார்.

நடிகர்கள் பிருத்விராஜ், டொவினோ தாமஸ்.

அதேநேரம், முதல் பாகத்தில் கேரள மாநில முதல்வரின் மகனாக ஜித்தின் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்து இளம் அரசியல் தலைவராக கவனம் பெற்றார்.

இதையும் படிக்க: மீண்டும் படப்பிடிப்பில் ரஜினி!

தற்போது, எம்புரான் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் நடிகர் டொவினோ தாமஸ் கேரளத்தின் இளம் முதல்வராக நடித்துக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இறுதியாக, டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஏஆர்எம் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளை நிறைவு செய்த கத்தி!

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014 அக்.22 ஆம் தேதி வெளியான திரைப்படம் கத்தி. விவசாயிகளின் தண... மேலும் பார்க்க

எனது வாழ்வை ஆசிர்வதிக்க வந்த படம்..! நயன்தாரா நெகிழ்ச்சி!

நானும் ரௌடி தான் திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக இருக்கிறார் நயன்தா... மேலும் பார்க்க

6000 திரைகளில் கங்குவா!

கங்குவா திரைப்படம் இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் ப... மேலும் பார்க்க

பரபரப்பில் பிக் பாஸ் வீடு! கடும் வாக்குவாதத்தில் ஆண் - பெண் அணியினர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் அணியினருக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாது என்று பெண்கள் அணியினர் கூறியுள்ளனர்.சாச்சனாவுக்கு உதவி செய்வதற்காக விதிகளை மீறி பெண்கள் வீட்டுக்குள் அருண் நுழைந்ததால... மேலும் பார்க்க

காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்! -ரசிகர்கள் அதிர்ச்சி

காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன.12 ஆண்டுகளுக்குப் பின்னர் 23-வது காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 20... மேலும் பார்க்க

கூலி படப்பிடிப்பில் இணைந்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்குப் பின் கூலி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனக... மேலும் பார்க்க