செய்திகள் :

ரயில்வே வழங்கும் கம்பளி போர்வைகள் சரியாக சலவை செய்யப்படுகிறதா... RTI-ல் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

post image

நாம் ரயிலில் பயணிக்கும்போது இந்திய ரயில்வேத் துறை சார்பாக தூங்குவதற்கான தலையணையும் போர்வையும் வழங்கப்படும். இதை உபயோகிப்பதில் பலருக்கும் எந்த சிக்கலும் இல்லை என்றாலும், சிலர் இவற்றை ஒதுக்கி விட்டு தங்களது சொந்த போர்வையே பயன்படுத்துவர்.

இந்த ரயில்வே போர்வைகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எல்லாருக்கும் எழுந்திருக்கும். இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக கேட்டதில், இதற்கு விடை கிடைத்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வைகள், பெட்ஷீட்கள் மற்றும் தலையணை உறைகளுக்கு பயணிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், பயணக் கட்டணத்துடனேயே இவற்றுக்கான தொகையும் பெறப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது இந்தியன் ரயில்வே.

கரிப் ரத் மற்றும் துரந்தோ போன்ற சில ரயில்களில், பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் எக்ஸ்ட்ரா போர்வைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்.

பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்ததன்படி, "ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் சலவைக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் அழுக்கான போர்வைகள் அப்படியே மடித்து வைக்கப்படும்." மற்றொரு சீனியர் பராமரிப்பு ஊழியர், "போர்வை தூய்மையாக இருக்கிறதா என்பது குறித்து முறையான கண்காணிப்பு இல்லை. போர்வைகள் பொதுவாக துர்நாற்றம் வீசினால் அல்லது அழுக்கடைந்தால் மட்டுமே சலவைக்கு அனுப்பப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், 46 ரயில்வே சொந்த சலவை நிலையங்களும், 25 BOOT (ஒப்பந்த அடிப்படையிலான) சலவை நிலையங்களும் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ரயில்வேயின் சலவை நிலையங்கள் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருப்பதுடன், சொந்தமான இயந்திரங்களும் உள்ளது. ஆனால் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர். ஒப்பந்த அடிப்படையிலான நிலையங்கள், ரயில்வேக்கு சொந்தமான இடத்திலேயே இருக்கின்றன. ஊழியர்களும் சலவை இயந்திரங்களும் தனியாரால் கையாளப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``கூவத்தூரில் நடந்த கூத்து மக்களுக்குத் தெரியும்!'' - எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

எவ்வளவோ சீனியர்கள் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். தற்போது இதற்கு உதயநிதி பதிலடி கொடுத... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டியது சரியா.. பாதிப்பு வருமா?

Doctor Vikatan: சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர் இர்ஃபான், தன் குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டிய வீடியோ விட்டது சர்ச்சைக்குள்ளானது. குழந்தை பிறந்ததும் வெட்டி எரிகிற தொப்புள்கொடியை இப்படி... மேலும் பார்க்க

விருதுநகர்: பள்ளிக்காகத் தனியாளாகப் போராடிய மாற்றுத்திறனாளி; மக்கள் திரண்டு ஆதரவு தந்த சுவாரஸ்யம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூர் கிராமப் பகுதியில் வசித்து வருபவர் பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளி முகேஷ். இவர் அப்பகுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சமூக ஆர்வலராகவு... மேலும் பார்க்க

``எல்.முருகனின் விஷமத்தை விட... சீமானின் கருத்து ஆபத்தானது'' - விசிக பொதுச் செயலாளர் அறிக்கை!

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை.."விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல... மேலும் பார்க்க

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்...உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்!

அமெரிக்கா தேர்தல் களம்அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்... மேலும் பார்க்க