செய்திகள் :

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்!

post image

அமெரிக்கா தேர்தல் களம்

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்கம், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் ஜோ பைடனுக்குப் பதில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள்முதலே, `அமெரிக்காவின் முதல் பெண் அதிபராவாரா கமலா ஹாரிஸ்' என தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

US Election | கமலா ஹாரிஸ் - ட்ரம்ப்

எலான் மஸ்க்

இன்னொருபக்கம், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் ( Space X) நிறுவனங்களின் நிறுவனரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகிறார். இதற்காகவே, அமெரிக்கா பி.ஏ.சி (America PAC) என்ற இணையதளப் பக்கத்தை எலான் மஸ்க் தொடங்கியிருக்கிறார்.

தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்...

இந்த நிலையில், தேர்தல் முடியும் வரை அமெரிக்கா பி.ஏ.சி இணையதளத்தில் தன்னுடைய மனுவில் கையெழுத்திடும் நபர்களில் தினமும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் தருவதாக எலான் மஸ்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பி.ஏ.சி இணையதளப் பக்கத்தில் இருக்கும் அந்த மனுவில், ``முதல் மற்றும் இரண்டாவது சட்ட திருத்தங்கள் பேச்சு சுதந்திரம் மற்றும் ஆயுதம் ஏந்துவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. இதில் கையெழுத்திடுவதன் மூலம், முதல் மற்றும் இரண்டாவது சட்ட திருத்தங்களுக்கு எனது ஆதரவை உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எலான் மஸ்க்

ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க்..

இதன்மூலம், ட்ரம்புக்கு ஆதரவைத் திரட்டும் எலான் மஸ்க், நேற்று முன்தினம் பென்சில்வேனியாவில் டிரம்புக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், முதல் நபராக ஜான் டிரெஹர் என்பவருக்கு ஒரு மில்லியன் டாலருக்கான காசோலையை வழங்கினார். ஏற்கெனவே, அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெரும் விவாதப்பொருளாக இருக்கும் சூழலில், ஆயுதம் ஏந்துவதற்கு ஆதரவாக மனுவில் கையெழுத்திடும் நபர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் என ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் பணத்தை வாரியிறைப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

``எல்.முருகனின் விஷமத்தை விட... சீமானின் கருத்து ஆபத்தானது'' - விசிக பொதுச் செயலாளர் அறிக்கை!

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை.."விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல... மேலும் பார்க்க

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்...உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

``ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்'' - ஆளுநருக்கு ஆதரவாக பிரேமலதா பதிலடி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் சான்றோர்குப்பம் பகுதியில், தேமுதிக நிர்வாகி மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பிரேமலதா வந்திருந்தார். அடுத்து ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க

Kalaignar Sports Kit: விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்.. | Photo Album

மக்களுடன் SELFI விழா மேடையில் துணை முதல்வர் மக்களுக்கு வணக்கம் செலுத்தும் காட்சி விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு ... மேலும் பார்க்க

``இந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானத்தில் செல்லாதீர்கள்'' - காலிஸ்தான் தீவிரவாதி விடுத்த மிரட்டல்!

காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.பன்னூன் குறிப்பிட்ட தேதிகளில் காலிஸ்தான் இனப்படுகொ... மேலும் பார்க்க

Udhayanidhi: ``2024 தேர்தல் ஒரு செமி ஃபைனல்தான், ஃபைனல் கேமுக்கு ரெடியா இருங்க'' - உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ... மேலும் பார்க்க