செய்திகள் :

``ஸ்டாலினே சுதந்திர தினத் தேதி தெரியாமல் திணறுகிறார்'' - ஆளுநருக்கு ஆதரவாக பிரேமலதா பதிலடி!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் சான்றோர்குப்பம் பகுதியில், தேமுதிக நிர்வாகி மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பிரேமலதா வந்திருந்தார்.

அடுத்து ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ``ஒரு நாள் மழைக்கே சென்னை நகரம் தாங்கவில்லை. எல்லா இடங்களிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. அதைச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கமோ... படகுகளையும், மீனவர்களையும் வாடகைக்கு எடுக்கிறது. ஒரு நாள் கூத்துக்கே இப்படியென்றால், டிசம்பரில்தான் பெருமழையைச் சந்திக்கப் போகிறோம். இதுவரைப் பார்த்தது வெறும் டிரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமே தான் வரப் போகிறது. அப்போது, தமிழ்நாடு எப்படி இருக்கப் போகிறது என்று நினைக்கும்போதே பயம் ஏற்படுகிறது.

பிரேமலதா விஜயகாந்த்

வாடகைக்கு எடுக்கிறார்கள்..

அதேபோல, தீபாவளி பண்டிகைக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். ஆனால், பேருந்துகள் இல்லாததால், தனியாரிடம் வாடகைக்கு எடுக்கிறார்கள். இந்த மாதிரியான வாடகை அரசாங்கத்தை இதுவரை தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. கஞ்சா, கள்ளச்சாராயம், போதை, டாஸ்மாக் எனப் பல்வேறு பிரச்னைகளும் நிலவுகின்றன. மக்களுக்கு வேலைக் கிடையாது. விவசாயம் இல்லை. நெசவுத்தொழில் பாதாளத்துக்குப் போய்விட்டது. அதை நம்பி வாழ்கிற மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. இவையெல்லாம் மாற வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்...

தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை. வெறும் வாயில் மட்டுமே அரசியல் செய்கிறார்கள். இந்த நிலையில் `தமிழ்த்தாய்’ வாழ்த்துப் பாடல் விவகாரத்தைப் பெரிய சர்ச்சையாக்கி, ஆளுநரை அசிங்கப்படுத்துவது கண்டனத்துக்குரியது. தூர்தர்ஷன் சேனலைச் சேர்ந்த ஒருப் பெண் அந்தப் பாடலைப் பாடினார்.

பிரேமலதா விஜயகாந்த்

அந்த இடத்தில் இருந்த ஆளுநரா பாட்டுப் பாடினார் அல்லது ஆளுநரா அப்படிப் பாடச்சொல்லி எழுதிக்கொடுத்தார். எனவே, மொத்தப் பழியையும் ஆளுநர்மீது தூக்கிப்போடுவது தவறான விஷயம். தூர்தர்ஷன் தரப்பில் மன்னிப்பும் கேட்டுவிட்டார்கள். அதோடு விட்டுவிட வேண்டும். எல்லோரும் தவறு செய்வது இயற்கை தானே. இன்று முதல்வராக இருக்கிற ஸ்டாலினே சுதந்திர தினம், குடியரசுத் தினத் தேதிகள் சொல்லத் தெரியாமல் திணறுகிறார். யாரும் மறந்துவிடவில்லை. ஆனாலும், தவறுகள் நடப்பது சகஜம்தான். இதை அரசியலாக்க வேண்டியத் தேவையில்லை’’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

``எல்.முருகனின் விஷமத்தை விட... சீமானின் கருத்து ஆபத்தானது'' - விசிக பொதுச் செயலாளர் அறிக்கை!

விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் அறிக்கை.."விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்திருந்தது அரசியல... மேலும் பார்க்க

`அரசியலுக்கு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள்..!’ - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்

ஒரு லட்சம் இளைஞர்கள்...உத்தர பிரதேசத்தின் வாராணசியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது மைக் பிடித்தவர், "கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

US Election: ``தினமும் ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர்'' - பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்!

அமெரிக்கா தேர்தல் களம்அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மறுபக்... மேலும் பார்க்க

Kalaignar Sports Kit: விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்.. | Photo Album

மக்களுடன் SELFI விழா மேடையில் துணை முதல்வர் மக்களுக்கு வணக்கம் செலுத்தும் காட்சி விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு வீரர்களுடன் துணை முதல்வர்விளையாட்டு ... மேலும் பார்க்க

``இந்த தேதிகளில் ஏர் இந்தியா விமானத்தில் செல்லாதீர்கள்'' - காலிஸ்தான் தீவிரவாதி விடுத்த மிரட்டல்!

காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன். நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.பன்னூன் குறிப்பிட்ட தேதிகளில் காலிஸ்தான் இனப்படுகொ... மேலும் பார்க்க

Udhayanidhi: ``2024 தேர்தல் ஒரு செமி ஃபைனல்தான், ஃபைனல் கேமுக்கு ரெடியா இருங்க'' - உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 707 ஊராட்சிகளுக்கு, விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 1,070 தொகுப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ... மேலும் பார்க்க