செய்திகள் :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா?

post image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

இதையும் படிக்க: தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான அணி இந்தியா: நியூசி. கேப்டன்

பந்துவீச்சு பயிற்சியில் முகமது ஷமி

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியின்போது, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் அணியில் இடம்பெற்று விளையாடவில்லை.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பிறகு முகமது ஷமி தீவிர பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முகமது ஷமி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தில் மாற்றம் இருக்காது: ரோஹித் சர்மா

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவாரா?

பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது குறித்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்பது குறித்தும் முகமது ஷமி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: நேற்று நான் பந்துவீசிய விதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கு முன்பாக பாதி தூரத்திலிருந்து ஓடி வந்து பந்துவீசிக் கொண்டிருந்தேன். ஏனென்றால், அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்தேன். ஆனால், நேற்று முழுவீச்சில் வழக்கமாக பந்துவீசும்போது ஓடி வரும் தூரத்திலிருந்து ஓடி வந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டேன்.

இதையும் படிக்க: 3 மணி நேர மோசமான ஆட்டத்தை வைத்து அணியை மதிப்பிட முடியாது: ரோஹித் சர்மா

எனது பந்துவீச்சு 100 சதவிகிதம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனக்கு வலி என்பது 100 சதவிகிதம் இல்லை. நீண்ட நாள்களாக பலரும் நான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவேனா அல்லது இடம்பெறமாட்டேனா என்பதை தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன என்றார்.

மே.இ.தீவுகள் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் விலகல்; இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ப... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் ககிசோ ரபாடா புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருக... மேலும் பார்க்க

106 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்; தென்னாப்பிரிக்கா 34 ரன்கள் முன்னிலை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: மெகா ஏலம் எப்போது?

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.துபை, சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆய்வு ச... மேலும் பார்க்க

முதல் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது நியூசிலாந்து!

நியூசிலாந்து மகளிரணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி துபையில் உள்ள துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான அணி இந்தியா: நியூசி. கேப்டன்

இந்தியாவுக்கு எதிராக 36 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்துள்ளதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இட... மேலும் பார்க்க