செய்திகள் :

`சீதாவுக்குப் பதில் சுஜிதா' - சமையல் நிகழ்ச்சியில் நடத்த மாற்றத்தின் பின்னணி என்ன?

post image
ஜீ தமிழ் சேனலில் சில தினங்களுக்கு முன் தொடங்கிய 'கிச்சன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியிலிருந்து நடிகை சீதா வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் நடித்த நடிகை சுஜிதா கமிட் ஆகியிருக்கிறார்.
நடிகை சீதா

நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே சீதா வெளியேறியதற்கான காரணம் குறித்து நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரத்தில் பேசினோம்.

''சமீபமா எல்லா டிவி சேனல்கள்லயுமே குக்கரி தொடர்பான ஷோவுல ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்க. ரசிகர்கள் மத்தியில் கிடைக்கிற ஆதரவே இதற்குக் காரணம்.  ஜீ தமிழ்ல்ல இதுக்கு முன்னாடி ஒளிபரப்பான குக்கரி ஷோக்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைச்சதால இப்ப அதாவது கடந்த மாதம் 15ம் தேதியிலிருந்து 'சமையல் எக்ஸ்பிரஸ்'ங்கிற இந்த ஷோவைத் தொடங்கினாங்க. நடிகை சீதா ரொம்ப வருஷமா சின்னத்திரைப் பக்கமே வராம இருக்கிறதால அவங்க வந்தா நல்லா இருக்கும்னு அவங்ககிட்ட பேசி அவங்களைக் கமிட் செய்தாங்க.

அவங்களுமே முதல்ல வர யோசிக்கத்தான் செஞ்சாங்க. தொடர்ந்து பேசினதுல நிகழ்ச்சிக்குள் வந்தாங்க' என்றவர்கள், ஆனால் என்ன காரணம்னு தெரியலைங்க, நிகழ்ச்சிக்கான புரோமோ ஷூட் தொடங்கியதுல இருந்தே பிரச்னையும் தொடங்கிடுச்சுன்னுதான் சொல்லணும்' என்றார்கள்.

அதாவது, ஷோவுக்கான புரோமோ ஷூட்டிங்கின் போதே சீதா தொடர்புடைய காட்சிகளைத் தனியாகவும் இன்னொரு விருந்தினராகக் கலந்துகொண்ட புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்னசி தொடர்புடைய ஷூட்டைத் தனியாகவும் தான் எடுத்தார்களாம்.

கிருஷ்ணா மெகன்சி தரப்பிலிருந்து வந்த சில கன்டிஷன்களே இப்படி ஷூட் செய்யப்பட்டதற்கான காரணமென்கிறார்கள். 'ஆரம்பமே இப்படி அக்கப்போரா இருக்கே' எனச் சேனல் நினைத்தாலும், வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டு போயிருக்கிறார்கள். தனித் தனி ஷூட் என்ற இந்த விஷயத்திலேயே சீதா கொஞ்சம் அப்செட் ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லையாம்.

புரோமோ ஷூட்டிங்கின் போது இன்னொரு விஷயமும் நடந்திருக்கிறது. அதாவது முதல் புரோமோ வீடியோவில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஆயிஷாவே இடம்பெறவில்லை. இதனால் அவருக்குமே அதிருப்தி. இத்தனை களேபரங்களுக்கு நடுவே தான் ஒருவழியாக நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது.  இரண்டு வாரங்களே ஒளிபரப்பான நிலையில் சீதா ஷூட்டிங்கில் கலந்துகொள்வதில் சில சிக்கல்கள் உண்டாகி, கடைசியில் தொடர்ந்து அவரால் ஷோவில் பங்கேற்க முடியாத சூழல் எனக் கருதிய சேனல் அவருக்குப் பதில் நடிகை சுஜிதாவைக் கமிட் செய்யலாமென்கிற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

முன்னெல்லாம் சீரியல்லதான் 'இவருக்குப் பதில் இவர்'னு வரும். இப்ப என்னடான்னா ரியாலிட்டி ஷோக்கள்லயும் வந்திடுச்சு... வேறென்ன சொல்றது?

குக் வித் கோமாளியில் பங்கெடுத்த சுஜிதா இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு பொருத்தமாக இருப்பார் என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!

நடிக்க வரும் முன்பே வில்லங்கம், வெளிநாட்டு ரசிகையுடன் காதல் - அர்னவைத் தொடரும் சர்ச்சைகள்

பிக்பாஸ் சீசன் 8 ல் இரண்டாவது வார எவிக்‌ஷன் நிகழ்ந்து அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது, 'உங்களுக்கு ஏதாவது நல்லது நடந்ததுன்னா, வாயாலேயே அதைக் கெடுத்துடாதீங்க' என விஜய... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ஆரம்பமான அடுத்த நாமினேஷன்; அணி மாறும் சாச்சனா, ஜெஃப்ரி; அடுத்து என்ன நடக்கும்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருக்கின்றன.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடக்கப்பட்டு இரண்டு வாரம் முடிவடைந்து இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் ரவீந்... மேலும் பார்க்க

BB Tamil Day 14: சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட தர்ஷா; விசே உசுப்பி விட்டதால் சூடான அர்னவ்

இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், அர்னவ் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், போட்டியாளர்கள் எந்த மாதிரியான தர வரிசையில் இருக்கிறார்கள் என்பதை ஒரு உத்தேசமான கணிப்பாக பார்த்து விடுவோம். ஆண்கள், பெண்கள் என்... மேலும் பார்க்க

Bigg Boss: ஜாக்குலின், தர்ஷாவை கடிந்துகொண்ட விஜய் சேதுபதி - இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது?

பிக் பாஸ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது.நேற்றைய எபிசோடில் வழக்கம்போல விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பல கேள்விகளை எழுப்பி விசாரித்தார். குறிப்பாக, சம்மந்தி பஞ்சாயத... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 13: சாச்சனாவின் ‘உணவு’ பிரச்னை; ஆட்டத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்கிறாரா விசே?

பிக் பாஸ் சீசனுக்கும் முட்டைக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஒவ்வொரு சீசனிலும் முட்டை தொடர்பான சர்ச்சைகள் உத்தரவாதமாக வெடிக்கும். இந்த எட்டாவது சீசனும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே இங்கும் வெடித்தது. உ... மேலும் பார்க்க