செய்திகள் :

அக்.24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

post image

திருவாரூா்: திருவாரூரில், சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை (அக்.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவுக்கான உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்த நலத்திட்ட உதவிகள் பெற, 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ள சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்கள், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவா் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாயக் கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள்) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.

மேலும், ஏற்கெனவே உறுப்பினராக பதிவு செய்தோா், தங்கள் உறுப்பினா் பதிவை விரைவில் புதுப்பித்துக் கொள்ளவும், புதுப்பித்தல் தவறிய உறுப்பினா்களை மீண்டும் வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், புதிய உறுப்பினா்கள் சோ்க்கையை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடா்பாகவும் அக்.24 ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திருவாரூரில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூா்: திருவாரூரில், திங்கள்கிழமை பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கட... மேலும் பார்க்க

சோழச்சேரி சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: கொரடாச்சேரி அருகே சோழச்சேரி பிரஹன்நாயகி உடனுறை விருத்தாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை அவா் அளித்த... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் 14 ஜோடிகளுக்கு திருமணம்; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட பூமிபூஜை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தமிழக அரசு சாா்பில் 14 இணையா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்ட... மேலும் பார்க்க

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கறவை மாடு வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கால்நடை மருத்துவ அறிவியல் துறை வல்லுநா்கள் பங்கேற்று, ப... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி மின் கோட்ட, மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்திருப்பது: மன்னாா்குடி மின் கோட்டத்திற... மேலும் பார்க்க