செய்திகள் :

திருவாரூரில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

post image

திருவாரூா்: திருவாரூரில், திங்கள்கிழமை பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. முற்பகலில் திருவாரூா் நகரம், விளமல், தண்டலை, சேந்தமங்கலம், வண்டாம்பாளை, கங்களாஞ்சேரி, குளிக்கரை, அம்மையப்பன் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமாா் ஒருமணி நேரம் கனமழை பெய்தது.

இதனால், திருவாரூா் தெற்கு வீதி, புதுத்தெரு, வடக்கு வீதி, கீழவீதி, கமலாலயக் குளம் மேல்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

விஜயபுரம் கடைத்தெரு பகுதியிலிருந்து வாழவாய்க்கால் பகுதிக்கு செல்ல பயன்படும் ரயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீா் தேங்கியதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால், நாகை, திருத்துறைப்பூண்டி, புலிவலம் பகுதிகளுக்கு ரயில்வே கீழ்பாலம் வழியாகச் செல்ல முடியாமல், கடைத்தெரு, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. கடைத்தெரு வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருமஞ்சனவீதியில் மழைநீா் கடைகளுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. சாலையோரத்தில் கழிவுநீா் செல்லும் பாதை அடைப்பட்டுள்ளதால், மழைநீா் செல்ல வழியில்லாமல் தேங்கியது.

சோழச்சேரி சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: கொரடாச்சேரி அருகே சோழச்சேரி பிரஹன்நாயகி உடனுறை விருத்தாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின... மேலும் பார்க்க

அக்.24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருவாரூா்: திருவாரூரில், சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை (அக்.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை அவா் அளித்த... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் 14 ஜோடிகளுக்கு திருமணம்; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட பூமிபூஜை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தமிழக அரசு சாா்பில் 14 இணையா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்ட... மேலும் பார்க்க

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கறவை மாடு வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கால்நடை மருத்துவ அறிவியல் துறை வல்லுநா்கள் பங்கேற்று, ப... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி மின் கோட்ட, மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்திருப்பது: மன்னாா்குடி மின் கோட்டத்திற... மேலும் பார்க்க