செய்திகள் :

சுவாமிமலை: பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றிய விவகாரம்: இருவர் பணியிட மாற்றம்; அமைச்சர் சொன்னது பொய்யா?

post image

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடாகும். இக்கோயிலில், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று வெளி மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து விட்டு, கோயில் வளாகத்தில் இரவில் தங்கி விட்டு விடிந்த பிறகுச் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

சுவாமிமலை கோயிலில் பக்தர்கள்

இந்நிலையில், கடந்த 19ம் தேதி கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி, கோயிலில் சுவாமி தரிசனம் செய்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் குழந்தைகளுடன் இரவு கோயில் வளாகத்தில் தங்கினர். சுமார் 60க்கும் மேற்பட்டோர் தெற்கு முகப்பு முன்புறம் உள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, தரையில் திடீரென தண்ணீர் வந்ததால், தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் பதறியடித்து எழுந்தனர்.

எதனால் தண்ணீர் வருகிறது என்பதைப் பக்தர்கள் பார்த்தபோது கோயில் பணியாளர்கள் சிலர் பைப் மூலம் தண்ணீரைத் தரையில் பீய்ச்சி அடித்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கும், கோயில் பணியாளர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் பக்தர்கள் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்டனர். கோயிலுக்கு வரும் போது சுவாமி தரிசனம் செய்து விட்டு கோயில் வளாகத்திலேயே தங்கி விட்டுச் செல்வோம். இதை வேண்டுதலாக வைத்துக் கொள்வோம். இதுவரை இதுபோல் பிரச்னை நடந்ததில்லை. இந்த முறை இப்படி எங்களைப் பாடாய்ப் படுத்தி விட்டதாக வேதனையை வெளிப்படுத்தினர்.

சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் படுத்திருந்த இடத்தில் தண்ணீர்

பின்னர் வேறு வழியின்றி வெளியில் தெருக்கள் மற்றும் வீட்டுத் திண்ணைகளில் படுத்துத் தூங்கி விட்டு காலையில் எழுந்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகச் சர்ச்சையானது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கோயில் துணை ஆணையர் உமாதேவி, கோயிலின் இரவு காவலரான நிரந்தர பணியாளர் சுவாமிமலையைச் சேர்ந்த சின்னதுரை (42) மற்றும் இரவுக் காவலரான தற்காலிக பணியாளர் சுப்பிரமணியன் (50) ஆகிய இரண்டு பேரையும், வேறு கோயில்களுக்கு இரவுக் காவலராகப் பணியிட மாற்றம் செய்தார். பக்தர்கள் படுத்திருந்த இடத்தில் தண்ணீர் ஊற்றவில்லை என அமைச்சர் சேகர் பாபு இதை மறுத்த நிலையில், பணியாளர்கள் இரண்டு பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``எல்லாம் ஐயப்பன் அருள்... பல ஆண்டு ஆசை நிறைவேறி உள்ளது'' சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 21-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோ... மேலும் பார்க்க