செய்திகள் :

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17, 586 கன அடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 18,094 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,586 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.89 அடியிலிருந்து 98.56 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது அணையில் நீர் இருப்பு 62.99 டிஎம்சியாகவுள்ளது. அணைப்ப்குதியில் 62.2 மி.மீ அளவுக்கு மழைபெய்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை நெருங்கி வருவது டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது!

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் திங்கள்கிழமை(அக்.21) கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், அபூ... மேலும் பார்க்க

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் செவ்வாய்க்கிழமை மாற்றமில்லை. திங்கள்கிழமை விற்பனையான அதே விலையில் இன்றும் விற்பனையாகிறது.அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, மாற்றமின்றி ஒரு கிரா... மேலும் பார்க்க

கனமழை: ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந... மேலும் பார்க்க

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படு... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பேராசிரியா்களுடன் துணை முதல்வா் உரையாடல்

சென்னை: ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பேராசிரியா்கள், சென்னையில் துணை முதல்வா் உதயநிதியுடன் கலந்துரையாடினா்.நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெ... மேலும் பார்க்க

90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்

சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண் இ... மேலும் பார்க்க