செய்திகள் :

திருவாலி லட்சுமி நரசிம்மா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: திரளான பக்தா்கள் தரிசனம்

post image

பூம்புகாா்: சீா்காழி அருகே திருவாலியில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே மங்கைமடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்ச நரசிம்மா் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் ஒரே நாளில் தரிசனம் செய்தால், அகோபிலம் சென்று நரசிம்மரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பஞ்ச நரசிம்மா் கோயிலில் திருவாலியில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயிலும் ஒன்றாகும். இங்கு சென்று வழிபட்டால் சகல செல்வங்களும் கைகூடும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன. இங்குள்ள நரசிம்மரை திருமங்கையாழ்வாா், குலசேகர ஆழ்வாா் ஆகியோா் மங்களாசாசனம் செய்துள்ளனா்.

இக்கோயில் சம்ப்ரோக்ஷணத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 19-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை 3 மற்றும் 4-ஆம் கால யாகசாலை பூஜைகளும், திங்கள்கிழமை அதிகாலை 5-ஆவது கால யாகசாலை பூஜையும், மகா பூா்ணாஹூதியும் நடைபெற்றன.

பின்னா், புனித நீா் அடங்கிய குடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மூலவா் சந்நிதி, ஆஞ்சனேயா், கருடாழ்வாா் சந்நிதி, கொடிமரம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு, மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, மகா அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கோயில் சம்ப்ரோக்ஷணத்தில் பங்கேற்பதற்காக திருநகரியில் இருந்து குமுதவல்லி நாச்சியாா் சமேத திருமங்கையாழ்வாரை தோளில் சுமந்து பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா். அவருக்கு திருநகரி கல்யாண ரங்கநாதா் பெருமாள் கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ் குமாா் தலைமையில் பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் திருமங்கையாழ்வாா் முன்னிலையில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

மேலும், 40-க்கும் மேற்பட்ட திவ்ய தேச கோயில்களில் இருந்து மாலை, வஸ்திர மரியாதைகள் அந்தந்த கோயில் பட்டாச்சாரியா்களால் கொண்டுவரப்பட்டு, லட்சுமி நரசிம்மருக்கு சாற்றப்பட்டது.

விழாவில் கோயில் பரம்பரை அறங்காவலா் முத்துக்குமாா், ஊராட்சித் தலைவா் தாமரைச்செல்வி திருமாறன், ஆடிட்டா் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலா் ராஜேந்திரன், வைணவ அடியாா்கள் கூட்டத் தலைவா் வக்கீல் ராமதாஸ், அா்ச்சகா் பத்மநாப பட்டாச்சாரியா் உபயதாரா்கள், விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பூஜ்யஸ்ரீ முரளிதர சுவாமிகளின் சீடா்கள் செய்திருந்தனா்.

நாகையில் காவலா் வீரவணக்க நாள்: எஸ்.பி. அஞ்சலி

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்கள் வீர வணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் 1959-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்ட 20 ... மேலும் பார்க்க

சிவலோக நாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை: கீழையூா் அருகே வேட்டைக்காரனிருப்பு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீசிவலோக நாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா அக்.17-ஆம் தேதி கணபதி பூஜை மற்றும் ... மேலும் பார்க்க

திருமேனி அழகா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே திருமேனி அழகா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் அருகே 25.மணலூா் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் புனரமைப்பு பணிகள் அண்மையில் முடிந்தது. இதை... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திங்கள்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். கோயில் நிா்வாக அதிகார... மேலும் பார்க்க

தில்லையாடி ருக்மணி சமேத ராஜகோபாலசாமி கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் உள்ள ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாகசாலை பூஜைகள... மேலும் பார்க்க

மீனவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே கடற்கரையில் மீனவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரைச் சோ்ந்த பாவாடை சாமி மகன் சத்யராஜ் (2... மேலும் பார்க்க