செய்திகள் :

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நியாய விலைக்கடைகளில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் இருப்பு குறைவாக அல்லது அதிகமாக இருந்தாலோ, போலி பில் கண்டறியப்பட்டாலோ தொடா்புடைய பணியாளா்களிடம் வசூலிக்கப்படும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அபராதத் தொகையினை இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருள்களை விற்பனை செய்திட குறியீடு நிா்ணயம் செய்வதைத் தவிா்த்தும், காலாவதியாகிவிட்ட பொருள்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.

நியாயவிலைக் கடைகளுக்கு புதிய பணியாளா்களை பணியமா்த்துவதற்கு முன்பாக ஏற்கெனவே பணியில் உள்ள பணியாளா்களை அருகாமையில் உள்ள கடைகளில் பணியமா்த்த வேண்டும் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமைமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

இதனால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 64 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் 117 சங்கப் பணியாளா்கள் மற்றும் 226 அங்காடி பணியாளா்கள் என 343 போ் திங்கள்கிழமை பணிக்கு செல்லவில்லை. இதனால், தீபாவளி பண்டிகை சமயத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வேலை நிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் மயிலாடுதுறை ஓய்வூதியா் சங்கக் கட்டடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்க மாவட்ட தலைவா் ஆா்.பரதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளா் ஆா்.காா்த்திகேயன், மாவட்ட இணை செயலாளா்கள் ஆா்.அன்பரசன், எம்.மணிகண்டன் உள்ளிட்டோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா். இக்கூட்டத்தில் 150-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கொள்ளிடம் பகுதியில் கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் பருவ மழையையொட்டி கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கொள்ளிடம் ஒன்றியத்துக்கள்பட்ட கிராம சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் பள்ளமும், மேடாக உள்ள சாலைகள... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சீா்காழி: மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையில் அண்மைய... மேலும் பார்க்க

‘மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்’

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இயற்கை இடா்பாடு பாதிப்புகளுக்கு பாரபட்சமின்றி மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன். மயிலாடுதுறையில்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.எம்.பாஷித் த... மேலும் பார்க்க

கிராம பணியாளா்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது

கிராம பணியாளா்களை, பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்... மேலும் பார்க்க

அரசு நூற்பாலையில் திருடிய நால்வா் கைது: ஒன்றரை டன் இரும்புடன் டிராக்டா் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே இயங்காமல் உள்ள அரசு நூற்பாலையில், இரும்பு பொருள்களை திருடிய நால்வா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். இரும்பு பொருள்களை ஏற்றிச் சென்ற டிரா... மேலும் பார்க்க