செய்திகள் :

`தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து' - சீமான் சொல்லும் பாடல் எது?

post image

தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி நீக்கப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது" எனக் கருத்து தெரிவித்தது அதிர்சியை ஏற்படுத்தியது.

இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சீமான் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றிய கேள்வியை எதிர்கொண்டார். அப்போது, "நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன் எழுதிய பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கட்டும்" என்று பேசினார்.

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 'வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே' என்று தொடங்கும் பாடலே புத்துச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்கிறது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

புதுச்சேரி தமிழ்தாய் வாழ்த்தின் வரிகள்:

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே

மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே

வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!

வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப்பேனோ

தமிழன் எந்நாளும் தலைகுனிவேனோ

சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்

தோன்றுடல் நீ உயிர் நான் மறப்பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே

செயலினை மூச்சினை உனக்களித்தேனே

நைந்தாய் எனில் நைந்துபோகும் என் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது

மொய்த்த நன் மனிதராம், புதுப்புனல் மீது

செந்தாமரைக் காடு பூத்தது போல

செழித்தஎன் தமிழே ஒளியே வாழி

இந்தப் பாடல் பாரதிதாசன் எழுதிய இசையமுது என்ற தொகுப்பின் இரண்டாம் பகுதியின் முதல் பாடலாக இடம் பெற்றிருந்தது.

இசையமுது இரண்டாம் தொகுதி நூல், 1952ம் ஆண்டு வெளியானது குறிபிடத்தக்கது.

அந்தக் காலத்தில் மேடைகளில் பாடுவதற்கென்றே பாரதிதாசன் பல பாடல்களை எழுதியிருக்கிறார். அப்படி எழுதப்பட்டதே இந்த பாடலும்.

பாரதிதாசனின் மறைவுக்குப் பிறகு 1971ம் ஆண்டு முதல் இந்த பாடலை அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் பாட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டில், இசையமைப்பாளர் எல். கிருஷ்ணன் இந்த பாடலுக்கு இசையமைத்தார்.

`திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது' - உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத் திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திண்டுக்கல்லில் திமுக... மேலும் பார்க்க

TVK : பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் தவெக மாநாட்டுத் திடல்; பரபரக்கும் இறுதிக்கட்ட பணிகள் - Spot Visit!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடக்கவிருக்கும் வி.சாலை பகுதிக்கு நேரடி விசிட் அடித்திருந்தோம்.V.Salaiசென்னையிலிருந்து... மேலும் பார்க்க

``நான் களத்தில் வேகமாக ஓடுபவன்... விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!' - சொல்கிறார் சீமான்

கரூர் மாநகரையொட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோவில் நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார்; திமுக கூட்டணியை உடைக்க முடியாது' - ரகுபதி

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச திருமண நிகழ்ச்சிய... மேலும் பார்க்க