செய்திகள் :

`திமுக-வின் கடைசி தொண்டன் இருக்கும்வரை திராவிடத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது' - உதயநிதி ஸ்டாலின்

post image

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் இல்லத் திருமண விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திண்டுக்கல்லில் திமுகவினர் வரவேற்பு

திருமண விழாவில் பேசும்போது, உதயநிதி ஸ்டாலின், "இந்த திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கழகக் குடும்பங்களுக்கே உரிய வகையில் சுயமரியாதை திருமணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் துணை முதல்வராக பொறுப்பேற்று, முதல் திருமணத்தை நடத்தி வைப்பதில் எனக்கு பெருமை.

இங்கு நிறைய மகளிர் வருகை தந்துள்ளீர்கள். உங்கள் உற்சாகத்தை பார்க்கும்போது அந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.

ஒருகாலத்தில் பெண்களை வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றார்கள். படிக்கக் கூடாது என்றார்கள். இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுத்தது திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும். அவரின் லட்சியங்களுக்கு அண்ணாவும் கலைஞரும் செயல்வடிவம் கொடுத்தார்கள்.

உதயநிதி ஸ்டாலின்

பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலேயே முதல்முறையாக இயற்றியவர் கலைஞர்.

அவர்கள் வழியில் இன்று நம்முடைய முதலமைச்சர் மகளிர் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது நமது திராவிட மாடல் அரசு.

பெண்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்த நம் அரசு, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

திருமண விழாவி்ல்

நான் சொல்லாததை சொன்னதாக பொய்யாக பல நீதிமன்றத்தில் என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். நான் சொன்னால் சொன்னதுதான், நான் கலைஞரின் பேரன் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன், அந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறேன்.

திண்டுக்கல் மாவட்டத்தின் மீது முதலமைச்சர் தனி மதிப்பு வைத்துள்ளார். எனக்கும் நிறைய தொடர்பு உண்டு. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இங்கு வந்துள்ளேன். இளைஞர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று முதலாவதாக வந்தது திண்டுக்கல் மாவட்டம்.

உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சராக பதவியேற்ற பின்பு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நிர்வாகிகள் வாழ்த்து சொல்ல வருவதாக சொன்னார்கள். சென்னைக்கு என்னைத்தேடி யாரும் வரவேண்டாம், நானே உங்களைத் தேடி வருகிறேன் என்று கூறினேன். திண்டுக்கல் மட்டுமல்ல, 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற வைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று இரவு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கட்சியினர் என்னை வரவேற்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாரத்தின்போது உங்களை சந்தித்தேன், மிகப்பெரிய வெற்றியை திண்டுக்கல் தொகுதியில் கொடுத்துள்ளீர்கள். 40 க்கு 40 என நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-விற்கு ஆதரவு தந்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே அண்ணா சூட்டிய தமிழ்நாடு எனும் பெயரை மாற்றப்போகிறேன் என்று சிலர் கிளம்பி சூடுபட்டார்கள். இப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடத்தை நீக்குகிறேன் என்று நினைத்து மண்ணை கவ்வியுள்ளார்கள். புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு சிலபேர் துணை போக முயன்றனர். முதல்ரும் தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடைசியில் மன்னிப்பு கேட்டார். திமுக-வின் கடைசி தொண்டன், தமிழன் இருக்கும் வரை தமிழையும் திராவிடத்தையும் பிரிக்க முடியாது, தொட்டுக் கூட பார்க்க முடியாது. இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருநாளும் ஏற்காது.

மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சுயமரியாதையோடு வாழ வேண்டும். ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும்" என்றார்.

`தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து' - சீமான் சொல்லும் பாடல் எது?

தமிழ்நாடு ஆளுநர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி நீக்கப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.இது குறித்து நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

TVK : பவுன்சர்கள் கட்டுப்பாட்டில் தவெக மாநாட்டுத் திடல்; பரபரக்கும் இறுதிக்கட்ட பணிகள் - Spot Visit!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநாடு நடக்கவிருக்கும் வி.சாலை பகுதிக்கு நேரடி விசிட் அடித்திருந்தோம்.V.Salaiசென்னையிலிருந்து... மேலும் பார்க்க

``நான் களத்தில் வேகமாக ஓடுபவன்... விஜய் எதிலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்!' - சொல்கிறார் சீமான்

கரூர் மாநகரையொட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கோவில் நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருக... மேலும் பார்க்க

`எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார்; திமுக கூட்டணியை உடைக்க முடியாது' - ரகுபதி

புதுக்கோட்டை, திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இலவச திருமண நிகழ்ச்சிய... மேலும் பார்க்க