செய்திகள் :

சிம்பு - 49 அறிவிப்பு!

post image

நடிகர் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தார். படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இதையும் படிக்க: நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!

தொடர்ந்து, இரண்டு நாள்களுக்கு முன் சிம்பு தன் எக்ஸ் தள பக்கத்தில் , ”தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 - 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம்” எனத் தெரிவித்திருந்தார். படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ’ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 49-வது படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பிக் பாஸில் புது வரலாறு: மீண்டும் கேப்டனானார் தர்ஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்ஷிகா கேப்டனாகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது முறையாக ஒருநபர் கேப்டனாகியுள்ளார் என்றாலும், மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக தர்... மேலும் பார்க்க

லப்பர் பந்து - ஓடிடி தளத்தில் எப்போது வெளியீடு?

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ளது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான ‘லப்பர் பந்து’ படத்தில் அட்டகத்தி... மேலும் பார்க்க

லக்கி பாஸ்கர் டிரைலர்!

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல் டீசர்!

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவான சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்... மேலும் பார்க்க

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவக்கம்!

நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் வெளியேறும் நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் பிக் பாஸ் வீட்டில்... மேலும் பார்க்க