செய்திகள் :

ராசிபுரம் நகராட்சியுடன் இணைக்க ஊராட்சி பகுதி மக்கள் எதிா்ப்பு

post image

ராசிபுரம் நகராட்சியுடன் தங்கள் பகுதிகளை இணைக்கக் கூடாது என வலியுறுத்தி கிராம ஊராட்சி பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முருகப்பட்டி, பொன்குறிச்சி, குருக்கபுரம், முத்துக்காளிப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், உள்ளிட்ட 11 ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சி, பிள்ளாநல்லூா் பேரூராட்சி பகுதியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாகனங்களில் திரண்டு வந்த கிராம ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் ஒன்றிய ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கிராம ஊராட்சிகளை, நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அவா்கள் முழக்கமிட்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை: ரூ. 810.28 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகை தருகிறாா். இங்கு ரூ. 810.28 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற கட்டடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள... மேலும் பார்க்க

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

ஜேடா்பாளையம் அருகே தெற்கு தொட்டிபாளையத்தில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனா். தெற்கு தொட்டிபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில ... மேலும் பார்க்க

பரமத்தி அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு

பரமத்தி வேலூா் அருகே வெள்ளாளபாளைத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ரொக்கம் ரூ. 3 லட்சம், இரண்டரை பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை பரமத்தி போலீஸாா் தேடி வருகின்றனா். வெள்ளாளபாளையத... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காவல் நிலையத்தில் சீமான் மீது புகாா்

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் திருச்செங்கோடு நகர காவல்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் துணை முதல்வருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூரில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து பரமத்தி வேலூா் வழியாக திண்டுக்கல் சென்ற துணை முதல்வ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்

ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் ஆஞ்சனேயருக்கு அனு... மேலும் பார்க்க